கதையாசிரியர் தொகுப்பு: ஷானவாஸ்

1 கதை கிடைத்துள்ளன.

பேசா மொழி

 

 விமான நிலையத்தில் இருந்து வரும்பொழுது டாக்ஸியில் எதுவும் பேசக்கூடாது என்று வாயை இருக்க மூடிக்கொண்டேன்,”அக்கா எப்படி இருக்கிறது?அக்கா பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?நீங்கள் வேள வேளைக்கு மாத்திரை சாப்பிடுகிறீர்களா? என்ற என் மகன் ஆனந்தின் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன்.அவனுக்கு தெரியும் நான் ஏன் வாயைத் திறந்து அவனுடன் சரளமாக பேசமுடியவில்லை என்று. சிங்கப்பூருக்குள் நுழைந்தவுடன் வாகனங்களின்பேரிரைச்சல் கேட்காமல் காதில் பஞ்சு வைத்து அடைத்தாற்போல் எவ்வளவு நிசப்தமாக ஆகிவிடுகிறது. “அம்மா வந்தவுடன் முகத்தை இப்படிவைத்துக்கொண்டிருக்காதீர்கள். டாக்ஸி