கதையாசிரியர் தொகுப்பு: வெங்கட் சுப்பிரமணியன்

20 கதைகள் கிடைத்துள்ளன.

என் சாட்சி எடுபடுமா?

 

 இன்று இரவு 8 மணி இருக்கும் என நினைக்கிறேன். அப்போதுதான் கொலை செய்யப்பட்டாள் செலீனா. கடந்த 2 வருடங்களாக வீட்டில் தனியாக இருந்து வந்தாள். பாதுகாப்புக்கு யாரும் இல்லை. பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். என்னை அவர்கள்தான் இங்கு அனுப்பி வைத்தார்கள். வருடத்திற்கு ஓரிரு முறைதான் நாங்கள் எல்லோரும் சந்திப்போம். அப்படி ஒரு சந்திப்பின்போதுதான் செலீனாவின் தந்தையின் நெருங்கிய நண்பரான போலீஸ் கமிஷனர் விக்ரமை முதன்முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகு அவரைப் பார்த்ததில்லை. இவ்வளவு பெரிய பங்களாவிற்கு வாட்ச்மேன்


ரயிலில் வந்த மயில்

 

 தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான். மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான். 5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே பெரிய நெற்றி. அதில் சின்ன வட்ட பொட்டு. காதில் தவழ்ந்துகொண்டிருந்த முடியைத் தாண்டி அவள் அணிந்திருந்த தங்கத்தோடு ஜொலித்தது. புன்னகையை அணிந்திருந்தன அவள் உதடுகள். நிலவைப் போல் வட்டமாக இருந்தது அவள்


தீதும் நன்றும்…

 

 “அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன். “எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு வரணும். சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்” என் தோளை தொட்டு தூக்கினார். எழுந்து பார்த்தபோது அம்மாவின் கண்களில் அன்பு, பாசம் வழிந்து கொண்டிருந்தது. “என்னம்மா, பிறந்த நாள் கிஃப்ட் எதுவும் இல்லையா?” கண்ணடித்தேன். “இருப்பா வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சில நொடிகளில் ஒரு ரூபாய் நோட்டினை எடுத்து வந்து என் கையில் அழுத்திவிட்டு, தலையில்


ரிங் டோன்

 

 மன்னன் திரைப்படத்தில் வரும் .”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று பாடலுடன் சிவாவின் கைப்பேசி ஒலித்தது. “சொல்லு மா, நான் இங்கதான் ரவி வீட்டுல இருக்கேன்” மறுமுனையில் சிவாவின் தாய் “காலையில சரியா சாப்பிடாமயே கிளம்பிட்டே சிவா. ரவி வீட்டுல ஏதாவது சாப்பிடு. இல்லைன்னா வெளியில ஏதாவது சாப்பிட்டுக்கோப்பா. மறந்திடாதே, பசி தாங்கமாட்டே நீ” என்றார். “நான் எவ்ளோ சாப்பிட்டாலும் உனக்கு நான் சரியா சாப்பிடாத மாதிரிதான் தெரியும்மா. நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே” “சரிப்பா. எப்போ வீட்டுக்கு


அப்பனுக்குப் பிள்ளை…

 

 சென்னை ஏ. ஜி. எம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சாந்தி. தவறு அவளுடையது அன்று. சாலையோரத்தில் இருந்த ஓர் இளநீர் கடையில், இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போது அந்த சாலையில் நடந்த விபத்தினால், எதிர்பாராத விதமாக ஒரு கார் அவளை மோதியது. வயிற்றில் பலத்த அடி. வயிற்றில் மட்டும் அன்று, ஆம், கிரி-சாந்தி தம்பதியினரின் கனவிலும், வாழ்விலும் பலத்த அடி. திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பார்க்காத மருத்துவர்


உன்னருகே நானிருந்தால்

 

 ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா. இன்னிக்கு நான் சமையல் வேலை எல்லாத்தையும் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மீனா வேறு யாரும் இல்லை, அவர் மனைவி. கதவைத் திறப்பதற்குள் இன்னொரு முறை மணி அடித்தாகிவிட்டது. பால்காரருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. “இதோ வர்றேன்பா. கொஞ்சம் பொறு” என்று சொல்லிக்கொண்டே பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார் கணேசன். கதவைத் திறந்து வெளியே


ஸ்ரீ ராம ஜெயம்

 

 கிரிக்கும் பிரமிளாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய பெற்றோர் பார்த்து நிச்சயித்து செய்து வைத்த திருமணம்தான் என்றாலும் இருவருடைய சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது. கிரி மிகவும் பொறுமைசாலி. கோபம் வராது, வந்தால் எளிதில் போகாது. பிரமிளா இதற்கு நேர்எதிர். அடிக்கடி கோபப்படுவாள், ஆனால் சில மணி நேரத்தில் அந்த கோபம் மறைந்துவிடும். திருமணமாகி முதல் ஆறு மாதங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், மகிழ்ச்சி நிறைந்திருந்தது இவர்களது வாழ்க்கை. அப்போதெல்லாம் கிரியின் அலுவலகத்திலும் அவனுக்கு


வாழ்க்கை என்கிற விமானம்

 

 நேரம் பகல் 3:30 மணி. புது டில்லியில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானம் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது. பெங்களூர் வந்தடைய இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தான் ரவி. காலை ஒன்பது மணிக்கு ஏர்போர்ட்டில் சிற்றுண்டி சாப்பிட்டதோடு சரி, அதற்குப் பிறகு அவன் எதுவுமே சாப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், ரவிக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் விமலா. ரவியும்


ஹீரோ

 

 வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ. அவர் இது வரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 50 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட். இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் துவக்க விழாவுக்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள். அவ்வளவு பிரபலம். ஒரு படத்தில் சிறைக்கைதி வேடம் அவருக்கு. அந்தப் படம் வெளிவந்த போது, படம் வெளியான ஒவ்வொரு திரையரங்கத்திலும்


அவர்களும் குழந்தைகளே

 

 வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில். மழலைப்பேச்சில் மனம் உருகி, முகம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது செந்திலுக்கு. “இங்க பாரு தேஜஸ், அப்பா சொல்லு, அப்பா சொல்லு” என்று செந்தில் சொல்ல, அதற்கு அந்த குட்டிப்பாப்பா தேஜஸ், “வா, வா” என்று சொல்லிக்கொண்டிருந்தான். நடுநடுவில் அர்த்தம் புரியாத சில சொற்களும் கலந்து வந்துக்கொண்டிருந்தன. வெகு நேரம் மன்றாடிக்கொண்டிருந்தான் செந்தில். அனாலும் அவன் எதிர்பார்த்த