கதையாசிரியர் தொகுப்பு: விமல்ராஜ் அழகப்பன்

1 கதை கிடைத்துள்ளன.

சாயம்

 

 கந்தவேலுக்கு சிறு பரப்பில் வேளாண் நிலங்கள் இருப்பினும் நெசவுதான் முழுநேர தொழில். வீட்டின் எதிரில் உள்ள கொட்டகையில் ஆறு விசைத்தறிகள் அமைத்திருக்கிறார். அனைத்திலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஊரில் பெரும்பகுதியினர் நெசவை நம்பியே இருக்கின்றனர். ஓரிரு சாயப் பட்டறைகளும் உள்ளன. அவினாசியிலிருந்து சற்று தொலைவில்தான் சொக்கம்பட்டி உள்ளது. ஊரின் கிழக்கே உள்ள தன் தென்னந்தோப்பிற்கு அருகிலேயே கந்தவேலுவின் வீடு அமைந்திருக்கிறது. அவரது மனைவி தனலட்சுமி கால்நடைகளையும், விவசாயத்தையும் கவனித்துக் கொள்கிறார். வீட்டின் பின்புறம் பராமரிக்கப்படும் மூன்று கறவை மாடுகளில்