கதையாசிரியர் தொகுப்பு: வினோத்குமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஜன்னல்

 

 வழக்கம் போல் அவள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகள். அது வழியே அவனைப் பார்ப்பது அவள் வழக்கம். ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியே ஓர் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள். இன்னும் அவன் வரவில்லை. ஜில்லென்று காற்று மட்டும் அவள் முகத்தை வருடியது. ஜன்னலின் உறுதியான கம்பிகளை, தன் மிருதுவான ஆள் காட்டி விரலால் தொட்டு, கண்ணுக்கு புலப்படாத அழகான ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தாள். அவள் விரல்


காதல் இடிகிறது

 

 விவரம் தெரிந்த பிறகு வாழ்ந்த கல்லூரி வாழ்க்கை கூட இதயத்தில் தூரமாய் உள்ளது, ஆனால், விவரம் தெரியாமல் அனுபவித்த, அந்த பள்ளி வாழ்க்கை இதயத்தில் இன்னமும் நெருக்கமாய், அழியாத சுவடாய் உள்ளது.. *எதுவும் கடந்து கடந்துபோகவில்லை* இதற்கு, நிறைய காரணங்கள் இருக்கலாம்.. எனக்கு, என்னோட முதல் காதல்.(பள்ளிக்கூடத்துல வர்றது காதலே இல்லைனு நிறையபேரு சண்டைக்கே வருவாங்க. எனக்கு பள்ளிக்கூடத்துக் காதல் உண்மையா? பொய்யான்னு தெரியலை. ஆனா, பிரிஞ்ச வலி மட்டும் உண்மை) ஏன்னா முதல் காதல் தோல்விதான்


தூக்கு

 

 கைகளில் அரிவாள், அரிவாளில் இரத்தம். அந்த இரத்தம் பூமிப் பந்தை நோக்கி சரசரவென்று விழுந்து, அந்த இடத்தை சிவப்பு மயமாக்கி மறைந்தது. ஓர் துளி மட்டும் அரிவாளின் முனையில், தொங்கிக் கொண்டிருந்தது. அரிவாளின் சிறு அசைவும், அந்த இரத்த துளியை பூமி மீது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியச் செய்யும். ஓர் ஜனக்கூட்டம் அரிவாள்காரனை நோக்கி ஓடி வந்தது. அருகில் சென்ற பல இதயங்கள் பதைபதைத்துப் போனது. “கடவுளே” என்று சில உதடுகள் கடவுளை துணைக்கு அழைத்தது.