கதையாசிரியர் தொகுப்பு: வித்யா முரளிதரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஜிம்மி பேசறேன்…

 

  வணக்கங்க, நான் தான் ஜிம்மி பேசறேன். நீங்கள்லாம் உங்க அனுபவங்களை சொல்லும்போது, நான் மட்டும் சொல்லகூடாதா? அதான் என்னோட வாழ்கையில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்க போறேன். அதுக்கு முன்னே நான் பார்க்க எப்படி இருப்பேன்னு சொல்லிடறேன், தேன் நிறத்துல புசுபுசுன்னு பார்க்க அழகா இருப்பேன். காதுகள் இலேசா கறுப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நிறைய அன்பு அப்புறம் கொஞ்சம் சாப்பாடு அவ்ளோ தாங்க என் தேவை. பல


காதலாகி…

 

 சுஜா, ரேடியோவில் பாட்டுக்கேட்டு கொண்டிருந்தாள். “நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது”…. மேற்க்கொண்டு இதை கேட்பதா நிறுத்திவிடலாமா என்று ஒரு நிமிடம் தவித்து போனாள், நினைவுகள் என்றும் உறங்குவதில்லை. காரணம் பாபு. அவனை முதல்முறை தன் தோழியின் அக்கா திருமணத்தில் பார்த்தாள். பெண் வீடு என்பதால் சுஜாவும் அவள் தோழியுடன் கல்யாண வேலையில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்ததால், பாபுவை கவனிக்கவில்லை. திருமணம் முடிந்து எல்லோரும் கிளம்பிவிட, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கு நெருக்கமானவர்களோடு நலங்கு தொடங்கியது.