கதையாசிரியர் தொகுப்பு: வாசுகி முத்துக்குமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பெரியநாயகி எம்.பி.பி.எஸ்

 

 பெரியநாயகி பெரியம்மா பெரிய ஸ்பெஷலிஸ்ட். ஒரு வாக்கியத்தி-லேயே இத்தனை ‘பெரிய’ இருப்பதைப் பார்த்து விட்டு அவர் எதில் ஸ்பெஷலிஸ்ட் என்று யோசிக்கிறீர்களா? தலைவலி, ஜலதோஷம், தசைப்பிடிப்பு, எலும்புமுறிவு என்று ஒரு ‘லிஸ்ட்’டுக்கே அவர் ஸ்பெஷலிஸ்ட்! படிப்பு என்னவோ அந்தக் காலத்து எட்டாப்புதான். ஆனால், தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிற எல்லா மருத்துவப் பத்திரிகைகளையும் ஒரு நாளைக்கு மூன்று வேளை கரைத்துக் குடித்து, கரை கண்டவர். போலி டாக்டராக போர்டு வைத்து.. போலீஸில் மாட்டி.. பேப்பரி போட்டோ வந்து.. என்று


இப்படி செய்துட்டியே ஜூலி!

 

 ஜூலி இப்படியெல்லாம் நடந்து கொள் வாள் என்று நாங்கள் யாரும் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பெண்கள், அப்புறம் ஒரு பையன். தம்பிக்கு 16 வயது இருக்கும்போது வந்து சேர்ந்தாள் ஜூலி. முதலில், ‘இதுவும் பெண்ணா’ என்று வருத்தப்பட்ட அப்பா, அவளின் வெள்ளை வெளேர் நிறம், புசுபுசு முடி, கோலிக்குண்டு கண்.. இவற்றை எல்லாம் பார்த்து மயங்கி விட்டார். தன் அழகால் எல்லோரையும் தன்வசமாக்கினாள் ஜூலி. அவள் நடந்த நாட்களை விட எல்லோர்


அழகாய் இருக்கிறேன்..பொறாமையாய் இருக்கிறது!

 

 குழந்தைகளை ஸ்கூல்ல இருந்து அழைச்சுட்டு வீட்டுக்குள்ள நுழையும்போதே என் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். என் எதிர்பார்ப்பை வீணாக்காம, ‘‘என்ன இவ்வளவு சந்தோஷம்?’’னு என் கணவர் கேட்கவும் கேட்டுட்டார். ‘‘இன்னிக்கு ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட் லட்சுமிய ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே என்ன சொன்னா தெரியுமா? நான் குஷ்பு மாதிரி இருக்கேனாம்!’’னேன். அதுக்கு அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சார் பாருங்க.. பொசுபொசுனு கோவம் வந்துடுச்சு எனக்கு. ‘‘என்ன.. என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?’’னு