கதையாசிரியர் தொகுப்பு: வசந்தி முனீஷ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வாயில்லா ஜீவன்கள்

 

 அழகானப்பொண்ணுக்கு அசிங்கமாய் மீசைமயிர்கள் முளைத்திருப்பதுபோல,பூச்செடிகளும் பழந்தரும் மரங்களும் நெறஞ்ச தோட்டத்து நடுவுல ஊம சித்தப்பாவின் பாழடைஞ்ச பழைய ஓட்டுவீடு. வீட்டைச்சுற்றி பெரிய மதில்சுவர். உள்ளே யாருமேறி குதித்திட முடியாது.குதித்தவனை கடித்து குதறாமல் செவலையும் விட்டது கிடையாது. சித்தப்பாவுக்கு கூடப்பொறந்தவங்க மொத்தம் நாலுப்பேரு.மூணு ஆம்பள.ஒரு பொம்பள.அத்தத்தான் எல்லாத்துக்கும் மூப்பு.அவுங்க எல்லாருமே பொழைக்கப்போன பாம்பேலயே வீடுவாசக்கெட்டி, அங்கேயே செட்டிலாகிட்டாங்க.கோயில் கொடைக்கி, இல்ல ஏதாவது நல்லதுக்கெட்டது நடந்தா மட்டும் ஊருக்கு வருவாங்க.அந்த வரத்தும் போவப்போவ ரொம்ப கம்மியாடுச்சி… ஆச்சியும் தாத்தாவும்,நாம போனப்பின்ன


துணி

 

 “வணக்கம்!பண்ண.” “வாடா!வெள்ள,மண்டய சொரியாத. என்ன வேணுஞ்சொல்லு.” “பண்ண,ரெண்டு மாடு வாங்கிருக்கேன்.” “அப்படியா!மாட்ட வேணா…நம்ம தோட்டத்துல மேய்ச்சிக்கோ,வேற என்ன?” “சரி பண்ண,மேய்ச்சுக்கிறேன்”னு மீண்டும் மண்டய சொரிஞ்சான் வெள்ளைத்துரை. “கழுதப்பயலே!மறுபடி ஏண்டா சொறிஞ்சிட்டு நிக்குற.சோலி நெறய கெடக்கு.சொல்லி தொலடா?” சளித்தொண்டையை இருமி,விழி ரெண்டை உருட்டினார் பண்ணையார். “மாட்டுக்கு வைக்கப்படப்பு அடய எடமில்ல பண்ண.” “இதென்னடா!ஆனைய வாங்குனவென் தொரட்டிய வாங்காத கதையாயிருக்கு.” “வீட்டுக்கு பின்னால ரெண்டுசென்ட்டு கெடந்துச்சி பண்ண.அதுலத்தான் தம்பி வீடு கெட்டிட்டு இருக்கான்.” “ஓந்தெருவுல எவன் எடமாவது சும்மாருந்தா,பண்ண சொன்னாருன்னு


ரெக்கார்ட் டான்ஸ்

 

 “யய்யா எப்பும் வந்த?ஒன் பொண்டாட்டிப்புள்ளய சொவமாயிருக்காவளா?” “எல்லாரும் நல்லாயிருக்கோம்.நீ எப்படியிருக்க பெரிம்ம…ஒன்பேர சொல்லி நல்லாயிருக்கேன்யா.” “யப்பா! ஒன்ன ஆச்சி சாப்பிடக்கூப்பிடுது.” “ஏலே! ஐய்யா…நீ எப்பும் வந்த?” என்று கேட்ட பெரிம்மயிடம் “இன்னைக்குதான் எட்டுமணி கேட்டிசி பஸுக்குக்கு”வந்தோமென்றான் மகன். “என்னய்யா?எல்லாருமா வந்துருக்கிய?” “இல்ல பெரிம்ம.அவ வரல நானும் புள்ளையிலும்தான் வந்திருக்கோம்,காலாண்டு பரிட்சை முடிஞ்சி, அதான்…லீவுக்கு இவங்கள உடவந்தேன்”. “சரிச்சரி…அப்பும் இந்த பத்து நாளும் தெருக்காட்ட புழுதிக்காடாக்கிரானுவ” என்றவள் மகனிடம் “ஒங்க ஆச்சி தோசகீச சுட்டுவச்சிருப்பா ஆறீரப்போவுது போங்க போய்