கதையாசிரியர் தொகுப்பு: லெமூரியன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வானவில் கல்யாணம்

 

 போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி வாங்க அழைத்தார். அனுமதி இலவசம் என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தது. யார் மீது கோபப்படுவது என்று தெரியாமல் பொதுவாக கோபப்பட்டான் விசாகன் . விசாகனும் கல்பனாவும் திருச்சியிலிருந்து இன்று காலை தான் சென்னை வந்தார்கள். இன்று ஜட்ஜ்மென்ட் டே. பெயில் எடுத்ததிலிருந்து ஆறு மாசத்தில் கோர்ட்டுக்கு இது பதினேழாவது விசிட். தத்கல் மூலமாக இந்தியன் ரயில்வேக்கு


நல்லதோர் வீணை செய்தே…

 

 பத்து வயது சொல்லலாம் கொடிக்கம்பத்தின் கீழே குப்புறப் படுத்திருந்ததைப்போல் கிடந்த அந்த சிறுமிக்கு. ரெட்டை பின்னல் போட்டிருந்த தலையில் ரத்தம் இன்னும் உறையவில்லை. கால்களில் அங்கங்கே ரத்தம் தோய்ந்திருந்தது. பிஞ்சுக் கைகள் இடம் பெயர்ந்து… ஹாஸ்பிட்டலுக்கு அள்ளிக்கொண்டு போனார்கள். கொஞ்ச நேரத்தில் அந்தப் பள்ளி வெறிச்சோடியது. சாக் பீசால் ஒருத்தன் மார்க் பண்ணிக் கொண்டிருந்தான். ப்ரின்சிபல் ரூம் சாத்தியிருந்தது. ஜன்னல் வழியே போலீஸ் தொப்பி தெர்ிந்தது. எங்கும் நிசப்தம். “லலிதா மிஸ் பாவம். ஸ்கூல் ரூல்ஸ்படி பேர்


பாரிஸுக்கு திரும்பப்போ…

 

 சார்ல் டிகால் ஏர்போர்ட்டுக்கு முல்லைநாதன் வந்து சேர்ந்த போது காலை ஏழு மணி. வாடகை கார் எடுத்தால் எண்பது யூரோ பழுத்து விடும் என்று நம்மூர் நாராயணன் பயங்காட்டி இருந்தான். நாலு மணிக்கே எழுந்து, இருபது கிலோ லக்கேஜுடன் அடாத குளிரில் நேஷொன் மெட்ரோவுக்கு நடையாய் நடந்து, பூமியை கடைந்து பாதாளத்தில் இரண்டாவது லெவெலில் செதுக்கியிருந்த ரயில்வே பிளாட்பாரத்துக்குள் நுழைந்தபோது நாதனுக்கு அந்த குளிரிலும் கொஞ்சம் வேர்த்தது. எந்த திசை ரயிலை பிடிக்கவேண்டும் என்று யாரிடமாவது கேட்கலாமென்று