கதையாசிரியர் தொகுப்பு: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றில் ஒரு பட்டம்

 

 காவ்யாவிடமிருந்து கணேஷ் அப்படியொரு போன் காலை எதிர்பார்க்கவில்லை., “சார். போன். யாரோ லேடீஸ் கூப்பிடறாங்க” என்று அட்டெண்டர் ‘வார்னிஷ்’ முனுசாமி சொன்னதும் அவன் பாய்ந்து போய் போனை எடுத்ததென்னவோ உண்மை. அவளுடன் பேசி ஒரு வாரம் ஆகி விட்டதே! “ஹலோ, ஹலோ, ஹலோ” என்று தன்னிச்சையாகப் பதறி விட்டு, யாராவது தன்னைப் பார்த்து விட்டார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். நல்ல வேளை. யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. டீசண்டான தனியார் அலுவலகம். வம்பு தும்பு அதிகம் கிடையாது.


மிமி

 

 ‘மிமி’ என்றால் ஏதோ ‘ஜிம்மி’ மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். ஏகப்பட்ட வளர்த்தி. சூப்பர் கிளாமர். அவளைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் அப்புறம் என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டீர்கள் என்பதால் அடியேனைப் பற்றிய சில அவசர விவரங்கள்: நான் நம்ப ஊரில் ஐ.ஐ.டியில் படித்து முடித்து, அப்பா அம்மாவுக்கு ஏர்போர்ட்டில் நமஸ்காரம் செய்து H1ல் அமொ¢க்கா வந்து அங்கே இங்கே முட்டி மோதிக்