கதையாசிரியர் தொகுப்பு: ரிஷ்வன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

டெஸ்ட் ட்யூப் காதல்

 

 புவனாவா அது… துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல் அவளைப் பார்த்ததும் எரிமலைக் குழம்பாய் கொதித்து கை நரம்புகள் புடைத்து கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி நடந்தது. கடைசியாய் ஒரு தரம் அவளைப் பார்த்து அக்னிச் சொற்களை அள்ளி தெளித்திட அலைபாயும் மனதுடன் தன் நடையை துரிதப்படுத்தினான். ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராய்… ஈருயிர் ஓர் உயிராய்


ஆழிப்பேரலை

 

 கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட.. அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்களிலான அலங்கார அணிகலன்களையும்


இரண்டு ஏக்கர் நிலம்

 

 ‘ஏம்மா… கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல.. இப்படி மத்தியில வச்சிருக்கியே.. மத்தவங்களும் நிக்க வேண்டாம்’ கடா மீசையோடு வெள்ளை வேட்டி சட்டையுமாய் நின்று கொண்டு வந்த அந்த ஆஜானுபாவமான மனிதர் நெற்றி புருவம் மேலேறியபடி சொல்ல… ‘ஆங்… கூடைக்கும் சேத்துத்தான் டிக்கெட் வாங்கிருக்கேன்… அது அப்படித்தான் இருக்கும்… நீ வேணுமின்னா உடம்பு நோகாம சொகுசா கார்ல வரவேண்டியது தானே…’ வெடுக்கென்று அந்த மூதாட்டி சொல்ல… ‘ஒரு கூடைக்கு டிக்கெட் வாங்கிட்டா… பஸ்சையே வெலைக்கு வாங்கிட்டதா


நேர்த்திக்கடன்

 

 சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல உறுதியா வந்தே தீரும்… வாழ்க்கையில எப்பவாவது ஒரு தரம் அதிர்ஷ்டம் வரும்ன்னு சொல்வாங்க.. அதுவும் அலாவுதீனுக்கு கெடைச்ச அற்புத விளக்கு மாதிரி ஒரு பொருள் நம்ம கைக்கு கெடைச்சி… அதனால நமக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிச்சினா… சொல்லவே வேண்டாம்… அப்படித்தான் எனக்கு ஒரு பொருள் கெடைச்சது… அது


கடவுளும் மனிதனும்

 

 தெருவெங்கும் மழை பெய்து சேறும் சகதிமாய் இருந்தது. நேற்று இரவு பெய்த கன மழை இன்றும் தொடர்ந்தது, அதை மழை என்று கூட சொல்லமுடியவில்லை, ஒரு சமயம் தூறலாகவும்.. மறு சமயம் சாரல் மழையாய்… பன்னீர் தூவுவதைப் போல தூறிக்கொண்டு… தெருவின் தரையை மண்ணோடு மழை நீர் கலந்து நசநசப்பை உண்டுபண்ணி அனைவருக்கும் புழுகத்தை உண்டாக்கியதே தவிர.. அந்த மழையால் கிஞ்சித்தும் பயனும் இல்லை. தி.நகரில் உள்ள அந்த பரபரப்பான கடைவீதி…. சாலையில் மழைநீர் மண்ணோடு கலந்து


பெரியம்மா

 

 ஏதோ பொத்தென்று என் மேல் விழ போர்வையை விலக்கி என்னவென்று பார்த்தேன்… அணில் ஒன்று ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு ஜன்னல் திரையை விலக்கி வந்த வழியே ஓடியது என் கண்ணில் பட்டது… என் போர்வையிலோ பாதி தின்ற கொய்யாப் பழம் விழுந்து கிடந்தது… என்ன நடந்தது என்று என்னால் ஓரளவு ஊகிக்க முடிந்தது… ஜன்னலோடு ஒட்டிய வேப்ப மரத்திலிருந்து அணில் உள்ளே நுழைய அந்த நேரம் பார்த்து காற்று பலமாய் அடித்திருக்க வேண்டும்… காற்றிலே திரைச்


கணேசபுரத்து ஜமீன்

 

 அன்று சனிக்கிழமை, சனிக்கிழமை வந்தாலே எப்பொழுதும் என் மனதில் ஒரு குதுகூலம் பிறந்துவிடும், ஏனென்றால், மறுநாள் விடுமறை என்பதால் அல்ல, அன்று ஆபீஸ் அரைநாள் மட்டுமே, அரைநாள் என்றால், ஏதோ மதியம் ஒரு மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம், எப்படியும் எல்லா வேலையும் முடிக்க மணி மூன்று ஆகிவிடும், அதற்குப்பிறகு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு, சிறிது நேரம் மனைவிடம் சல்லாப்பித்து, மாலை ஒரு சினிமாவுக்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, அப்படியே


தொலைந்த உறவுகள்

 

 ‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’ தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள், நீண்ட நாள் எண்ணை விடாத வீட்டின் காம்பவுண்ட் கேட் ’கிரீச்’ என்று பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட எலியாய் முனகியது, எனக்கு புரிந்துவிட்டது…வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன் தான்… அப்பாவுடன் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். அவர் வரும் சமயமெல்லாம் ’சாக்லேட்’வாங்கி வந்து என் குழந்தைகளுக்கு கொடுத்தே


ஷிவானி

 

 ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் அதைப் பார்த்த பொழுது, . அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில், நான்கு சேர்கள் இருக்க, அதில் மூன்று சேர்கள்காலியாக, அதில் ஒன்றில், ஷிவானி அமர்ந்திருந்தாள், இல்லை இல்லைஅப்படியே பின்புறம்சரிந்து, மேல் கூரையைப்பார்த்தபடி, அணிந்திருந்த துப்பட்டா விலகி, நாடு மார்பில் குத்திய கத்தியு டன், ரத்தம் சேரில் வழிந்து, மார்ப்லஸ் தரை எங்கும் ஒரே ரத்தமயமாய், கண்கள் மேலே பார்க்க, நிறைய போராடி இருக்க வேண்டும், முகமெல்லாம் ஒரேரத்தமாய்,எதிரில்