கதையாசிரியர் தொகுப்பு: ராமசந்திரன் உஷா

1 கதை கிடைத்துள்ளன.

மனிதன் ஒரு சமூக விலங்கு

 

 பத்து நாள் கழித்து அலுவலகத்தில் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்ததும், பார்க்க வேண்டிய அவசர வேலைகள் தலையை சுற்ற வைத்தன. இதில் ஒவ்வொருவராய் வந்து எட்டிப் பார்த்து விசாரிப்பது வேறு! வீட்டில் மனைவி சித்ராவுடன் நடந்த வாக்குவாதம் ஞாபகம் வந்து தலைவலியை அதிகப்படுத்தியது பிரகாஷ்க்கு தேடினாலும் தலைவலி மாத்திரை கிடைக்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்தான். “பிரகாஷ், பங்கஷன் நல்லப்படி ஆச்சா? ஏன் மொகம் ஒரு மாதிரி இருக்கு? ” என்றக் குரலைக் கேட்டு கண்ணை