கதையாசிரியர் தொகுப்பு: முரசொலி சொர்ணம்

5 கதைகள் கிடைத்துள்ளன.

புத்திசாலி முத்து

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி இரண்டு ! பள்ளிக்கூடத்து பெரிய மணி, ‘டாண். டாண்’ என்று முதல் மணி’ அடித்தது ; ஓய்ந்தது. முதுகிலே புத்தகப் பை ; கையிலே குடை இந்தக் கோலத்தோடு, பள்ளிக்கூடத்தை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தான் முத்து. “தம்பி….!” – அந்த சமயத்தில் இப்படி ஒரு குரல் எழும்பியது. அந்தக் குரலில் தான் எத்தனை அன்பு! பரிவு! முத்து திரும்பிப்


முயல் குட்டி

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முயலே, முயலே, ஓடி வா முன்னே பாய்ந்து ஓடி வா! தயங்கித் தயங்கித் தூர நீ தள்ளி நிற்க லாகுமோ? பயத்தை நீயும் விட்டிடு; பாய்ந்து முன்னே வந்திடு!” என்ற பாட்டை முணு முணுத்துக்கொண்டே ஓடோடி வந்தாள், மங்களம். வாசலைக்கூட அவள் தாண்ட வில்லை. அங்கே…அவளுடைய ஆசை, அன்பு எல்லாமே உருவான ஓர் உயிர் அவளுக்காகவே காத்துக்கொண்டிருந்தது. அது ஒரு முயல்குட்டி! மங்களம்


மிட்டாய்க்காரன்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசலில் உட்கார்ந்திருந்தாள் வேணி. அவளைப் போன்ற சிறுமிகளும், சிறுவர்களும் தெருவில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வேணிக்கு மட்டும் என்ன வந்தது? ஏன் எதையோ பறிகொடுத்தவள் போல் அப்படி அமர்ந்திருக்கிறாள்? சற்றைக்கொரு தரம் அவள் தெரு முனையை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன்? யாருடைய வரவையோதான் அவள் அத்தனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சிறிது நேரம் சென்றது. “மிட்டாய்! மிட்டாய்!” என்ற குரல்


கிளியின் கதை

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிறிய ஊர் – அது ஒரு ஒரு அழகான கிராமம். நான்கு புறமும் மலைகள் – ஊரின் நடுவே ஒரு சிற்றாறு – திரும்பும் திசை எல்லாம் பச்சைப் பசேல் என்ற தோட்டங்கள் — அப்பப்பா ; அந்த ஊரின் அழகே அழகு! ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு – பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் விளையாடுவதற் கென நல்ல நல்ல இடங்கள் இருந்தன.


புத்தர் பொம்மை

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எதிரே பயங்கரமாக உறுமிய வண்ணம் பாயத் துடிக்கும் வேங்கை – பின்னால் படமெடுத்தாடும் பாழும் நாகம் – தலைக்கு மேலே கூரிய நகங்கள் விரித்துக் கொத்திடப் பறக்கும் கழுகுக் கூட்டம் – இதற்கிடையில் ஒரு பச்சிளம் பாலகன் சிக்கிக்கொண்டால்?…. “அப்பப்பா! நினைக்கும் போதே நடுக்கம் பிறக்கிறதே! எதற்காகவாம் இப்படியொரு பயங்கரமான கற்பனை?” என்று கேட்கிறீர்களா? அதோ பாருங்கள், நடுங்கும் கால்கள் – கலங்கும்