கதையாசிரியர் தொகுப்பு: மீரான் மைதீன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

பீகேயும் தானியல் ஆசானும்

 

 மனசு நல்லாருந்தா மந்திரமும் தேவையில்லை ஒரு மயிருந் தேவையில்லை தெரியுமா…காலை கொஞ்சம் நீட்டி நீட்டி போட்டு நடந்தார் பீகே. பின்னால் தானியேல் மாமாவும் சந்திரனும் பீகேவின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தம்பிடித்து நடந்தார்கள். பீகே வயசில் மூப்பு என்றாலும் கெத்துப் பிடித்து நடந்தார் என்றால் ஒரு மாதிரிப்பட்டவன் அவருடைய நடைக்கு ஜோடி போட முடியாது. பழய ரோட்டில் வடக்கமாற நடந்து கொண்டிருந்தார்கள். பீகே சொன்னார் “தானியேலே குறைஞ்சது இரண்டாயிரம் டெப்பாவது போடணும். நடக்க நடக்க கேஸ்


ரோசம்மா பீவி..

 

 பூவத்தானின் விஸ்வரூபம் கண்டு பயந்து நோய் நொடியில் விழுந்து மரிக்கக்கிடந்த ஒன்றிரெண்டு பேர்களை தர்ஹாவில் தூக்கிக் கொண்டு போட்டார்கள். பேயாடிய வியாத்தும்மா நாக்கைக்கடித்துக் கொண்டு முரட்டுக் குரலில் ஹே.. ஹே. . . என அலறிக்கொண்டே சத்தமிட்டாள். ‘எனக்க மரத்த வெட்டுனவனுக்க கோட்டைய நான் தகர்ப்பேன்….” பயந்து நடுங்கிய ஜனங்கள் மோந்திக்குப் பிறகு வீடுகளைவிட்டு வெளிய வருவதில்லை. சடங்கான பிள்ளைகள் இருட்டியபிறகு வளவுக்கு போகும் அவசியங்களில் கூடவே வீட்டிலிருக்கும் வயசான பெத்தாமார் இரும்பு கம்பியோடு ஓதிக்கொண்டே காவல்நிப்பார்கள்.


யானை

 

 பள்ளிக்கிணத்துக்கு தெக்குப்பக்கம் அந்த வளைந்த தென்னையில் யானையை கட்டிப் போட்டிருந்தார்கள். ஆண் யானை . அதன் தந்தத்தின் முனை மழுக்கப்பட்டிருந்தது. வாலில் நிறைய ரோமங்கள் பிடுங்கப் பட்டிருந்தன. நேத்திரவே பள்ளிக்கு யானை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பெரிய கூட்டம் காத்திருந்தது. பனிரெண்டு மணிவரை யானை வரவில்லை; காத்திருந்த கூட்டம் முனங்கிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போனது. சோன்பப்டி வியாபாரி ஒன்பது மணிக்கு மணியடித்துக்கொண்டே வந்தபோது பாதி பயலுவளும் பள்ளிக்கு முன்னால் சாடி வந்துட்டானுவோ. சோன்பப்டிகாரன் பெட்ரோமாஸ் லைட்


மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை

 

 வேடிக்கையும் ஞானத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருந்த ஒரு நடு இரவாயிருந்தது. என்ன காரணக் காரியமென்றுத் தெரியாமல் சற்றும் முன்பின் தொடர்பற்று திடீரென பேச்சு மாமரம் பற்றியதாக மாறியபோது நான் ஒரு மாமரத்தைக் குறிப்பிட்டு அந்த மாமரத்திடம் போய் என் பெயரைச் சொல்லிப்பார் அது மெல்ல தலையசைக்கும் என்றேன். அவள் என்னை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே சிரித்தாள். அவளின் அவ்வாறான சிரிப்பை பல தருணங்களில் நான் சுவீகரித்திருப்பவன் என்பதால் இப்போது அவளின் பரீட்சயமான சிரிப்பை உறுதிப்படுத்திக் கொண்டே தொனி பிசகாமால்


கொழும்பு குதிரை

 

 எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிந்து சைக்கிள் வீட்டிலிருக்கிறது. வாப்பாவிடம் கேட்டபோது அவர் சின்னபிள்ளையாக இருக்கும்போது அவரின் வாப்பா கொழும்பிலிருந்து கொண்டு வந்தது என பெருமையாக சொல்லுவார். சைக்கிளின் பின்பக்கம் இரண்டாக மடக்கி சிறிதாக்கிக் கொள்ளும் வசதியோடு ஒரு பெரிய கேரியர் உண்டு. ஒரு பங்சர் பெட்டி வேறு சைக்கிளோடு கூடவே இருக்கும். நாங்கதான் வெட்கப்பட்டு வாப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பங்சர் பெட்டியை பிரித்து எடுத்தோம். சைக்கிள் சக்கரத்திலுள்ள கம்பிகளெல்லாம் ரொம்பவும் தடிமனானது. இப்போதுள்ள சைக்கிள்களிலெல்லாம் அப்படியான


சம்மந்தக்குடி

 

 சம்மந்தக் குடிய நினைத்த போது அஸ்மாவின் ஈரக்குலையிலிருந்து குமட்டிக் கொண்டு புறப்பட்ட எச்சிலைக் காறித் தெருவில் துப்பினார். “ஒரு லோகத்துலயும் இப்படிப் பாக்கலாம்மா … தூ…’’மறுபடியும் துப்பினாள். “என்ன மைனி… ஒரு மாதிரியா வாறியோ… யாருட்ட உள்ள கோவமாக்கும்….”எதிர் வீட்டு ஆத்துனாச்சி பெத்தா விசயம் சேகரிக்கும் ஆவலில் வாசலின் விளிம்புக்கு வந்தாள். “எனக்கு மூத்த மவள கெட்டிக் கொடுத்த சம்மந்தகுடி சீர நெனைச்சித்தான் ஏழு வருசமாச்சி ’ துக்கயளுக்கு ஒரு நெறவு வேண்டாமா?…தூ…‘’துப்பிக் கொண்டேதான் அஸ்மா தொடர்ந்து


மஜ்னூன்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்புள்ள என்றோ, என் இதயமே என்றோ அல்லது என் உயிரே என்றோ எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் நிறைய தடுமாற்றம் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டித்தீர்த்துவிடும் உத்வேகத்துடனே எழுதுகிறேன். இது உனக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இதுபற்றி கவலை கொள்ளும் மனநிலையில் நான் எழுதவில்லை. ஒருவேளை நான் சிறைச்சாலையில் இறந்து போனால் என் சடலம் என்னவாகும் என்பதைக்குறித்து என்னால் இப்போது எதுவும்