கதையாசிரியர் தொகுப்பு: மன்னார் அமுதன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

எஸ்தர்

 

 காற்றைக் கிழித்துக்கொண்டு அரிவாள் கீழிறங்கியது. கழுத்தில் பீறிட்ட இரத்தம் கையில் பிசுபிசுக்கையில் தான் தெரிந்தது “காதலின் விலை என்னவென்று..? விலுக்கென ஒரு துள்ளலுடன் எழுந்து சரிவில் பாய்ந்து ஓடத் தொடங்கினான் கேசவன். பாவம் எஸ்தர் எந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறாளோ… சூரிய உதயத்திற்கு முன்னெழுந்து ஓடத் தொடங்கும் ஒரு மானின் வேகத்தோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேசவன் ஓடிக்கொண்டிருந்தான். மலையில் ஏறும் போதிருந்த கஸ்டம் இறங்கும் போது இல்லை. ஒரு துள்ளலில் மலையை விட்டு இறங்கியது போலிருந்தது. இரையைக்


ஒற்றை யானை

 

 தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கை பட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தடவியபோது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் எனத்தெரியாது. ‘முழிப்பு