கதையாசிரியர் தொகுப்பு: மண்குதிரை

1 கதை கிடைத்துள்ளன.

வெம்பா

 

 ஒத்தவீட்டு முத்துதான் முதலில் அவ்வுருவைப் பார்த்தான். சம்மாரம் விலக்கில் அசைந்துகொண்டிருந்தது. ஒரு மனிதனாக உருவம்கொள்ளத் தொடங்கிப் பிறகு புகைபோல நிலவொளியில் மங்கிக்கொண்டிருந்த அந்நிழலுருவைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்த முத்து, வீட்டு நிலையில் செருகியிருந்த பேட்டரி லைட்டை எடுத்துக் கொண்டு திரும்பினான். அதற்குள் அது அந்தச் சாலையிலிருந்து விலகிச் சென்றிருந்தது. தொலைவிலிருந்த வேலிச்செடிகள் சிறு சுழல் ஒன்றில் சிக்கி லேசாக அசைந்து ஓய்ந்ததைக் கண்டதும் அது காற்றினுள் ஒளிந்துகொண்டதாகக் கற்பிதம்கொண்டான். அதற்குத் தோதாகப் பழங் கதைகளின் பெருங்கொத்தை அசைத்துப்