கதையாசிரியர் தொகுப்பு: மகேஷ் சுப்பிரமணியம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சனியன் என்னைக் காதலிக்கிறதா…?

 

 அந்த சிறிய அறையில் அமைதி நிலவியிருக்க, தலைக்குமேல் சுற்றிய மின் விசிறியின் சத்தம் தெளிவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி வேர்த்துக்கொண்டிருந்தான்அவன். அவனுக்குப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண்ணை கூப்பிட்டு விட்டிருந்த நொடிகளில் நாம் உள் நுழைந்துவிட்டோம். அதுதான் இந்த அமைதி.. கொலுசும் வளையலும் ஒன்றாய் ஆர்ப்பரிக்க பெண் கையில் காபித்தட்டுடன் வந்தாள். அந்த வளையல்களின் சினுங்கல்களிலேயே நித்யாவின் இதயம் படபடத்தது. தொடரும் முன் நான் யார்? என் பின்புலம் என்ன? என் பிரச்சினை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்


அந்த பல்லி என்னையே பார்க்கிறது!

 

 “இங்க பாருங்க முகில், பல்லிய பார்த்து பயப்படறதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல… எனக்கும் கூட பல்லினாபயம்தான் ” இப்படிக் சொன்ன சைக்காலஜிஸ்ட் பரிமளாவிற்கு, இருபத்தி சொச்சம் வயதிருக்கும். காலை நேர வெயில் ஜன்னல்வழி ஊடுருவி அவளை வெண்ணிற காட்டன் சேலையில் தேவதை போல் ஜொலிக்க வைத்திருந்தது.. எதிரில் உட்கார்ந்திருந்த முகில், எதிலும் கவனமற்று தன் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் பரிதவிப்பது அவன்கண்களில் தெரிந்தது… ” அதில்ல மேடம், எனக்கு என் வீட்டுல இருக்கற ஒரே ஒரு பல்லிய


வீழ்வேனென்று எண்ணாதே…

 

 மெரினாவில் அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன. பிற்பகல் நேரம். வெயில் பின் உச்சியில் வெல்டு வைத்தது. எதற்கும் சலிக்காமல் காதல் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன சில இளம் ஜோடிகள். பெரும்பாலான மீன் விற்கும் கடைகளும், வண்டிகளும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இரண்டு படகுகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த வலை நிழலில், கண்களைச் சுருக்கிக் கடலையே பார்த்துக்கொண்டு இருந்தான் அவன். காற்றில் அலையும் அடர்த்தியான முடி. இரண்டு நாளே ஆன தாடி. மாநிறம். இப்படியெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை. டிகிரி முடித்து வேலை தேடும்