கதையாசிரியர் தொகுப்பு: பிரபா செந்தாமரை

5 கதைகள் கிடைத்துள்ளன.

கூரைய பிச்சிகிட்டு …

 

 பொழுது சாய்ந்த நேரம் மதி அறக்க பறக்க ஓடி வந்தான் ,கொலையை கண்டவனைப்போல் தலைதெறிக்க உள்ளே நுழைந்தவன்,அறையினுள் நுழையும்போதே படியில் கால் இடறி சமாளித்து மேலேறினான், ரவியை கண்டதும் சற்று நிதானமாகி ரவியிடம் அந்த விஷயத்தை கூறினான் , கூறும் போதே அவசரத்தில் உளறினான் மதி. அவசரம்,பயம்,வெறி என கலந்த மனநிலையில் கூறினான்.இதுவரை அமைதியாய் இருந்தவன், மதி கூறியதை கேட்டதும் பயந்து போனான் முகமெல்லாம் அதிர்ச்சியில் வெளுத்து வேர்த்துபோயிருந்தது ரவிக்கு ,தீவிரமானான் என்ன செய்வதென்று சிந்திக்க தொடங்கினான்


சொன்னா நம்பமாட்டீங்க !

 

 வீட்டுக்கு போயி 15 நாள் ஆச்சு , மனசு ரொம்ப பாரமா இருந்தது ,ரோட்டுல எல்லாரும் வேகவேகமாய் வீட்டுக்கு போறாங்க, மேகம் பூரா பக்கத்து வீட்டு குட்டி பாப்பா சுவத்துல கரிய வச்சி கிறுக்குனதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாய் கரு மேகமா ஆங்காங்கே இருட்டினதுபோல் இருந்தது ,மழை வர்ற மாதிரியும் வராத மாதிரியும் ,காத்து பலமா அடிச்சது கண்டிப்பா எதிர் வீட்டு தம்பிதத்தா மழைக்காக காத்திருப்பார்,நீண்ட நாள் கோடை வெயிலுக்கு நடுவுல இதுபோல் மழை வந்தா நல்லா இருக்கும்ன்னு


செருப்படி வாங்குவ!

 

 ஹரி சற்றும் எதிர்பாராமல் ஒரு அரை சுஜாவிடமிருந்து. நட்டநடு பார்க்கில், அமைதியான அந்த இடத்தில இந்த சத்தம். அங்கே தொப்பையை குறைக்க ஓடும் அங்கில்களும், நடக்கும் ஆண்ட்டிகளும், மறைவில் அமர்ந்து காதலிக்கும் ஜோடிகளும், பள்ளியை கட்டடித்து கதையடிக்கும் மாணவர்களும், பேரனை விளையாட அழைத்து வந்து இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் பணிஓய்வு பெற்ற தாத்தா, என அனைவரும் ஹரியை பார்த்துக்கொண்டிருந்தனர். மவுண்ட் ரோடு சிக்னலில் ஜட்டி கூட இல்லாமல் நிற்பதுபோல் இருந்தது. எதையும் கண்டுகொள்ளாமல், விறுவிறுவென பார்க்கின்


ண்ணா ..கிங்க்ஸ் ஒன்னு கொடுங்க !

 

 விடியற்காலை ஆன்ட்ராய்டை தடவியவாறே மணியை பார்க்கின்றான் ராம், பிறகுதான் தெரிகிறது அது விடியற்காலை இல்லை விடிந்தகாலை என்று, அப்போதும் எந்த ஒரு பரபரப்பும் இன்றி எழுந்து பேஸ்புக்,ட்விட்டர் எல்லாவற்றிலும் ஒரு அரைமணி வேடிக்கை பார்த்து ஒரு காலை வணக்கம் ஸ்டாடஸ் போட்ட பிறகு மற்ற வேலைகளை செய்ய தொடங்கினான் . தம் அடித்தல்-காலை கடன் முடித்தல்-பல்விலக்குதல்-குளித்தல்-சாப்பிடுதல் போன்ற மிகவும் கடுமையான வேலைகளை தவிர வேறு எந்த வேலையும் இல்லை ராமிற்கு ,எழுந்ததும் ஸ்மார்ட்போனில் செய்ததை இப்போது கணினியில்


டேவிட்டின் மர்மக்கொலைகள்

 

 டேவிட் கல்லூரி முடித்து வேலை தேடுகிறேன் என்ற போர்வையில் பொழுதை போக்கும் ஒரு பட்டதாரி. இவனெல்லாம் டிகிரி முடிபானென்று யாரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள், உண்மையில் டேவிட்ட்டை பொறுத்தவரை அது ஒரு கனவுதான். வாரமுழுக்க படம் பார்ப்பதும் தூங்குவதுமாக இருப்பவன் வார இறுதியில், வேறு ஒருவனாக இருப்பான் (ஒரு படத்தில் ஆறு மணிக்கு மேல் வடிவேலு இருப்பாரே அது போல்), என்ன நடந்தது நடக்குது நடக்க போவது எதுவுமே தெரியாது இரண்டு நாட்களுக்கு, எப்படியாவது ரெண்டு