கதையாசிரியர் தொகுப்பு: பிரத்யுக்ஷா பிரஜோத்

2 கதைகள் கிடைத்துள்ளன.

திருப்புமுனை

 

 வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்துக் கதவைத் தாழிட்டான். வீடு என்று கூற முடியாது, ஓர் அறை மட்டுமே. அதுவும் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாகக் காட்சியளித்தது. தோளில் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பையைக் கழட்டி கட்டிலில் வைத்தான். அருகிலிருந்த பாட்டிலில் கடைசிச் சொட்டு தீரும் வரை தண்ணீரைக் குடித்து முடித்தான். வெளியே அடித்த வெயிலில் கருகிய உடல் அந்த நீரால் குளிர்ந்தது. பர்ஸை எடுத்துப் பார்த்தான். ரூபாய் நோட்டுகளை விடப் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. ஒரு


நல்லதம்பி

 

 கால் போன போக்கில் நடப்பான். மனம் போன போக்கில் நடப்பான். எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதான் நல்லதம்பி. அதற்கு மேல் கேட்டால் “சொல்லுறதுக்கு பெருசா ஒண்ணுமில்ல” என்ற பதிலே வரும். எங்கு சென்றாலும் இந்த நான்கு தெருக்களுக்குள் தான் சுற்றி வர வேண்டும் எனுமளவிற்கு சிறிய ஊர். “ஏலே நல்லதம்பிய பாத்த?” இந்த தேடலே ஊர் பெருசுகளின் விடியல் பொழுதாய் அமையும். “அந்த பயல தான் நானும் தேடுறேன்… ஆப்புட மாட்டேங்குறான். வெரசா வர சொன்னா ஒரு பொழுது