கதையாசிரியர் தொகுப்பு: பாரதிநேசன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஈரம்

 

 அது ஒரு ரயில் நிலையம். அங்கே பயணிகளை நிரப்புவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் பத்து நிமிடம் நிற்பது வழக்கம். ரயில் நின்ற போது கருப்பு வெள்ளை தாடியும் கசங்கிய யூனிபார்மும் வியர்வை பூத்திருந்த முகத்தையும் அடையாளமாக கொண்ட ரயில்வே டீ ஊழியர் ஒருவர் “சமோசா ! டீ!” “சமோசா ! டீ !” “சமோசா ! டீ !” என ரயிலின் சன்னல் கம்பிகளின் மீது தனது ‘டீ கேனை’ தொங்கவிட்டு கூவிக்கொண்டிருந்தார். “யோவ்…எனக்கு ஒரு டீ” என


அருமருந்து

 

 “தொடரும்”….. என்று இரவு 10.30 நாடகம் முடிந்ததும் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது. மரம் செடி கொடிகள் மூலம் இயற்கை இரவோடு பேசிக்கொண்டிருக்க…என் மனம் உன்னையே அசைபோட்டுக்கொண்டிருந்தது. “நீ வந்துவிடுவாய் ! ” என்பதால், போர்வை, தலையணை உதறி படுக்கையை சரிசெய்து கொண்டேன். கொசுவோடு போர் செய்ய ஆல்அவுட்டும் வைத்துவிட்டேன். சன்னலை அடைத்து அறையை மேலும் இருட்டாக்கி கொண்டேன். உனக்குப் பிடித்த “நீல நைட்லாம்ப்” மட்டும் போட்டுக்கொண்டேன். அம்மா அப்பா உறங்கிவிட்டார்கள் !. உன் வருகைக்கான எல்லா ஏற்பாடையும்


லைகா

 

 அந்த தெரு மக்கள் அன்று வழக்கமான மகிழ்ச்சியில் இருந்து நழுவியிருந்தனர். அவர்களின் பேச்சில் இருக்கும் துள்ளல் விடுப்பில் சென்றுவிட்டது. அவர்களின் அன்பும்,உணவும் அவனுக்காக காத்திருந்தன. அவனுக்கு பிடிக்கும் என்று அங்காடி அரிசியில் வடித்த “வெள்ளை சாதமும்,மீன் குழம்பும்” சில மீன் துண்டுகளோடு அவனுடைய தட்டில் நிரம்பியிருக்கிறது. ஒருநாள் ஆகியும் அவனது பாத சுவடுகளோ,அவன் தூரத்தில் வரும்போதே ஒரு காத தூரம்வரை தூக்களாக வீசும் அவனது தண்ணீர்படாத மேனியின் தாராள துர்நாற்றமோ இப்போது அங்கே இல்லை. யார் வீட்டிலாவது