கதையாசிரியர் தொகுப்பு: பாரதிசந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

பாடமும் பாயாசமும்

 

 முதல் பாடவேளை, வகுப்பில் பாதி மாணவர்கள் இன்னும் வரவில்லை. முதல் வகுப்பு என்றால் பாடம் நடத்துவதற்கு லாயிக்கற்றது. முழுமையாக எல்லா மாணவர்களும் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொருவராக வருவர். ஒவ்வொருவரும் ஒவ்வொருக்குமான கதை சொல்வார். கேட்டால் நமக்குக் கோபம் தான் வரும். எனவே யாரையும் ஏன் தாமதம் என்று கேட்பதே இல்லை. சிறிது நேரத்தில் பாடம் நடத்த ஆரம்பித்தேன். ஒரே நேர்கோட்டில் மாணவர்களைக் கொண்டு வருவதற்கு, ஏதேனும் வெளி விஷயம் பேசி, வகுப்பின் கவனத்தை இழுத்துப்பிடிக்க