கதையாசிரியர் தொகுப்பு: ந.வரலட்சுமி

2 கதைகள் கிடைத்துள்ளன.

சூப்பரா படிப்பேன்!

 

 ‘டிங்டாங்’… அழைப்புமணி ஓசை. ‘‘ஓஹோய்…’ கால்பந்து மைதான ஆரவாரம். ‘லொக் லொக்’…. நோயாளியின் இருமல். கதவு திறக்காததால் கதவைத் தட்டினார் ராதா ஆன்ட்டி. சில நொடிகளில் கதவைத் திறந்த ஜீவா, ‘‘அம்மா’’ என்று குரல் கொடுத்துவிட்டு, டி.வி&யில் ஆர்வமானான். ஜீவாவின் அம்மா சுகுணாவுக்கு குளிர்ஜுரம். அவரை நலம் விசாரிக்கவே சக ஊழியரான ராதா ஆன்ட்டி வந்திருக்கிறார். கூடத்தில் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள், இறைந்துகிடக்கும் பாத்திரங்கள், நடுவில் அமர்ந்து டி.வி. பார்க்கும் ஜீவா… சுகுணா இருக்கும் அறை நோக்கிப்


சேர்த்து வைக்கத் தெரியணும்!

 

 புத்தகத்துக்கு அட்டை போட பிரவுன் ஷீட் வாங்கவேண்டும் என்று அப்பாவிடம் காசு கேட்டான் ராஜு. பத்தாம் வகுப்பு படிக்கும் பையன்தானே… பணத்தின் அருமை தெரியும் என்று அப்பாவும் பணம் கொடுத்தார். கடைக்குப் போய், மூன்று பிரவுன் ஷீட் வாங்கிக் கொண்டு மீதிப் பணத்தில் பஞ்சு மிட்டாய், குச்சி ஐஸ் என கண்ணில் பட்டதை வாங்கித் தின்றுவிட்டு வீடு திரும்பினான் ராஜு. வாங்கிய ஷீட் எல்லா புத்தகங்களுக்கும் அட்டை போடப் போதவில்லை. அதனால் மீண்டும் அப்பாவிடம் பணம் கேட்டான்.