கதையாசிரியர் தொகுப்பு: நிலாவண்ணன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

இட்ட தீ

 

 அப்போதுதான் உலகைக்காண கண் விழித்த வெளிச்சம் தன் ஒளிக்கதிர்களால் துளைத்துச் சென்று மண்ணைத் தொட சில நாழிகை நேரம் எடுத்துக் கொண்டது. அடிவானிலிருந்து கதிரவன் எழுந்து நடக்க ஆரம்பித்ததும் மரங்களும் செடி கொடிகளும் புல் பூஞ்சைகளும் நெஞ்சை நிமிர்த்துச் சிலிர்த்து அந்நாந்து வானுக்கு வணக்கம் செலுத்திக் கொண்டன. பகலெல்லாம் மரத்துக்கு மரம் தாவி கிடைப்பதை உண்டு மரக்கிளைகளில் அதன் இண்டு இடுக்குகளில் அன்றைய இரவுப் பொழுதை மட்டும் வசிப்பிடமாக்கிக் கொண்ட வானரங்கள் ஆரவாரித்து அன்றைய வயிற்று வேட்டைக்குக்


மறுபக்கம்

 

 அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். இங்கு வேறு மாதிரி. இறுதி வகுப்பில் படித்த மாணவன் எந்நேரமும் புறப்பட்டுப் போய்விடவேண்டுமே அப்படியான ஒரு சூழல். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ‘பஸ்ட் கிளாஸ் வார்டு’ என்றே எல்லாரும் சொல்கிறார்கள். அந்த அறையில் ஒரே ஒரு படுக்கை. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு. அதன் பக்கத்தில் பல வகையான கருவிகள்.. எந்நேரமும் விழுப்புநிலை


குதிரை வால்

 

 அன்று அந்த உடன் வேலை செய்யும் மலாய் நண்பனிடம் உதவி கேட்காமல் போனதானது இப்போது எண்ணி வேதனை படவேண்டியதாகி விட்டது. ‘பர்சை’ எத்தனையோ தடவை வீட்டில் விட்டு விட்டு வந்த போதெல்லாம் மனம் கோணாது சாப்பாட்டு நேரத்தில் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறான். முத்துசாமியும் மிக நாணயமாக அவனிடம் மறுநாளே பணத்தைக் கொடுத்து விடுவார். இப்படி இவர் மறதி மன்னனாக இருந்தாலும் அக்மால் என பெயர் கொண்ட அவன் ஒரு நாள் கூட முத்துசாமியிடம் தன் பணப்பையை


இழப்பு

 

 எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு பக்கத்து தோட்டத்துக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி காலங்காலமாய்ப் பதித்துப் பதுகாத்து வைத்திருந்த இசை காதில் ஒலிக்க


மூளைக்கூலிகள்

 

 கே.எல்.ஐ.ஏ, எனும் கோலலம்பூர் அனைத்துலக விமான நிலைய காத்திருப்பு முகப்பு. அன்றுதான் சுப்பிரமணியமும் செல்லம்மாவும் முதன் முறையாக வந்திருந்தார்கள். விமான நிலையத்தின் பரபரப்பும் சுறுசுறுப்பும் அனைத்துகலப் பயணிகளின் சலசலப்பான உரையாடல்களும் எதை யோசிப்பது எதை விடுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தார்கள். மகன் அரசனை யார் யாரோ வந்து வாழ்த்தினார்கள். அவன் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஒரு சிலர் வந்து இவர்களுக்குக் கை நீட்ட கை கொடுக்கும் கலையை அறியாதிருந்தும் முதன் முறையாக அன்று


சுனை வற்றாது

 

 செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவள் மனம் இனம் புரியாத பரபரப்பில் ஆழ்ந்து போனது. தொண்டைக் குழிக்குள் தமிழ் நாட்டு ‘கோலி சோடா’ போன்ற ஓர் உருண்டை உருளுவது போன்ற உணர்வு. போகலாமா… வேண்டாமா… அதற்கான பதிலை மனதின் ஆழத்தில் தேடித் தேடிப் பார்த்தாள். மாயமான் போல் வருவதும் மறைவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. அந்த தோட்டத்தில் நடந்த சாவோ வாழ்வோ எதற்குமே போகாமல் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி மறுத்து விட்ட போது இந்த இறப்பிற்கு மட்டும் போகக் கேட்டால்


தொடாமல் நின்றவன்

 

 அன்று தோட்டத்தில் வருடாந்திர ஆலயத்திருவிழா. காலை பூசைக்குப் பிறகு தீமூட்டப்பட்ட காண்டாகட்டைகள் பதமாக வெந்து தீக்குழி கனகவென்ற தணலுடன் தயார் நிலையில் இருந்தது. அதில் மேலும் அனல் கனியத் தென்னை மட்டை கொண்டு கிளறி விடப்பட்டது. தீக்குழிக்கு எதிரே உள்ளூர், வெளியூர் பக்தர்களும் பார்வையாளர்களும் பக்திப் பரவசத்துடனும் வேடிக்கை பார்க்கவும் குழுமியிருந்தார்கள். நேர்த்திக்கடனைத் தீக்குழி இறங்கி நிறைவேற்ற ஆண்களும் தீக்குழி வலம் வர பெண்களும் காத்திருந்தனர். தீ இறங்குபவர்களுக்கும் தீக்குழி சுற்றி வருபவர்களுக்கும் மஞ்சள் நீரைத் தலை