கதையாசிரியர் தொகுப்பு: நாரா.நாச்சியப்பன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

குதிக்கும் இருப்புச் சட்டி

 

 பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி. பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள். நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலை யும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும்


சிங்கத்தின் அச்சம்

 

 ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை. வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. அவற்றைத் தேடிப் பிடிப்பது முடியாது போல் இருந்தது. பசி தாங்க முடியாமல் சினத்துடன். இரை தேடிச் சென்று கொண்டிருந்தது சிங்கம். கடைசியில் திடுதிப்பென்று ஒரு நரி எதிரில் வந்து அகப்பட்டுக் கொண்டது.


நன்றியின் உருவம்

 

 முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான் ; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து வந்தான், அந்த நாயும் அவனிடம் மிகுந்த அன்பு வைத்திருந் தது. அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்றது. அவனுக்குப் பல சிறு வேலைகள் செய்து உதவிபுரிந்து வந்தது. ஒரு நாள் தேவநாதன் வாணிக வேலையாக


மாஸ்டர் கோபாலன்

 

  “கோபாலா?” “ஏன் சார்!” “நேற்று நான் சொல்லித் தந்த பாடத்தின் பெயர் என்ன?” “அல்லாவுதீனும் அதிசய விளக்கும்” “எங்கே, அந்தக் கதையைச் சொல். பார்க்கலாம்” “சரியாக நினைவில்லை சார்” அவ்வளவுதான். ஆசிரியருக்கு வந்தது கோபம். எடுத்தார் பிரம்பை. அடித்தார் கோபாலனை. நன்றாக அடித்தார். கோபாலனுக்கு அடிப்பட்ட இடமெல்லாம் புடைத்துத் தழும் பறிவிட்டது. கத்தினான், கதறினான், கூவினான், அழுதான், கண்ணீர் கசிந்தது, உருண்டது, கன்னத்தில் வழிந்தது. “கழுதை! கதை கூட உன் புத்தியில் ஏறவில்லை, வேறு பாடம்


தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

 

 பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள் . அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன வேலையைச் செய்ய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் பேசிச் சிரித்து விளையாட ஒரு பிள்ளை இல்லை . கொஞ்சிப் பேசி மகிழ ஒரு குழந்தை இல்லையே என்று அவர்களுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. ஒரு நாள் ஒரு மனிதன் அவர்கள் வீட்டுக்கு வந் தான். அவன் கையில் ஓர் அழகான பெண் குழந்தை இருந்தது.


பறவை தந்த பரிசு

 

 ஓர் ஊரில் கண்ணன் என்று பெயருடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக ஏழை. அவன் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு பெரிய பூந்தோட்டம் அமைந் திருந்தது. அந்தத் தோட்டத்தைப் பார்த்துக் கொள் வதுதான் கண்ணனுடைய வேலை . காலையில் எழுந்ததும் பூஞ் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுவதும், பூத்த மலர்களைப் பறித்துச் சென்று வீட்டுக்கார அம்மாவிடம் கொடுப்பதும், தோட் டத்தைப் பெருக்கிக் குப்பை இல்லாமல்


புகழ் பெற்ற வள்ளல்

 

 ஓர் ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயர் வெள்ளுடையார் . அவர் வெள்ளையான உள்ளத்தை யுடையவராக இருந்ததாலும், எப்பொழுதும் தூய உடைகளையே வெள்ளையாகத் துவைத்து உடுத்தி வந்ததாலும் அவருடைய இயற்பெயர் மறைந்து காரணப் பெயராகிய வெள்ளுடையார் என்ற பெயரே நிலைத்து விட்டது. வெள்ளுடையாருக்கு அந்த ஊரிலே மதிப்பு மிகுதி. புலவர் வெள்ளுடையாருக்கு என்று வீடோ நிலமோ சொந்தமாகக் கிடையாது. அவரிடம் இருந்த தெல்லாம் அறிவாகிய செல்வம் ஒன்று தான். அவரி டம் படித்த மாணாக்கர்கள் படிப்பு


நான்கு குருவிகள்

 

 ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன. ஒரு நாள் சிட்டுக் குருவி, தன் குஞ்சுகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குஞ்சுகளில் ஒன்று, “அம்மா, அம்மா என்னால் வெயிலைத் தாங்க முடியவில்லை” என்றது. உடனே மற்றொரு குஞ்சு , “அம்மா அன்று ஒரு நாள் மழை பெய்த போது நான் தெப்பமாய் நனைந்து விட்டேன்’ என்றது. “நேற்று இரவு பனியில் படுத்திருந்ததால் எனக்குத் தடிமன் பிடித்துக்


ஐயம் தீர்க்கும் ஆசான்

 

 அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது. பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி போவதற்கும் இடையே அந்தக் கிராமம் இருந்தது. வழிப் போக்கர்கள் சந்தித்துக் கொள்ளும் மைய ஊராக அது விளங்கியது. அதனால் உழவுத் தொழிலைத் தவிர அந்தக் கிராம மக்கள் மற்றொரு தொழிலும் செய்து பிழைத்துக்


துன்பம் போக்கும் அன்பர்

 

 மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண் டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறியபின் அவர் இவ்வாறு உறுதி செய்து கொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது. ஒரு சிற்றூரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ”துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப் படியே கண்ணீர் விட்டுவிடுகிறாராம் ! யாராவது ஏதாவது கவலை