கதையாசிரியர் தொகுப்பு: துவாரகா சாமிநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

கனவு காணுங்கள்

 

 எப்போதுமில்லாத சந்தோசத்துடன் திரு பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்ததை தொட்டு தொட்டு பார்த்து குதூகலித்தான்.நடையை வேகமாக போட்டான். தாத்தா சுந்தரத்தை பார்த்து முதல் வேலையாக இதைச் சொல்ல வேண்டும். யாருக்கும் கிடைக்காதது தனக்கு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். திரும்பவும் கையில் வைத்திருந்த கொய்யா கன்றைத் தொட்டு பார்த்தான். பாவூரின் பள்ளிக்கூடத்தில் யாரோ அரசியல் கட்சியின் பொதுச்செயலாளருக்கு பிறந்த நாளாம். எப்படா கெடைக்கும்னு காத்திருந்து பெற்றது. ஆனால் அவர்களோ இந்தியா ஒளிர்கிறது நாமனைவரும் வளர்ச்சியை நோக்கி