கதையாசிரியர் தொகுப்பு: திவானா சாரதி

3 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சோந்தி

 

 சிக்னலையும் மதிக்காமல் ரோட்டை கடந்து இரு வாகனங்களையும் லேசாக முட்டி தள்ளி விட்டு ரோட்டோரமாய் இருந்த பிளாட்பாரத்தில் மாருதி 800 முட்டி நின்றது. அங்கிருந்த நடைபாதை கடைகள் நாசமாகின. அங்கிருந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர் நீதிதேவன் மற்றும் முத்துராம், வாகனம்பிள்ளை என்ற இரு ட்ராபிக் கான்ஸ்டபில்கள் வேகமாக கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர். யோவ் என்னையா இது புதுவண்டியாட்டம்ல தெரியுது நம்பர் பாருவே என்றார் நீதி. சார் ரிஜிஸ்ட்ரேசன் கூட பன்னல சார் இது கான்ஸ்டபில் முத்துராம். நீதி:


கிளைகளில்லா பறவைகள்

 

 அந்த கிராமம் அவ்வளவு அழகானது அல்ல. ஒரே ஒரு பெரிய ஆலமரம் அதை சுற்றி முப்பது முதல் நாற்பது வீடுகளே இருக்கும். அதிலும் பாதிக்கு மேல் குடிசை வீடுகள். அந்த ஊரில் நாய்கள் அதிகம். அந்த நாய்கள் எதுவும் பார்ப்பதற்கு தெரு நாய்கள் போல இருக்காது. அன்று காலை செல்வத்தின் கண்களில் சூரிய ஒளி பட்டு அவனது தூக்கத்தை கெடுத்தது. சிறு சிறு ஓட்டை விழுந்த அந்த போர்வையை எப்படி போர்த்தி கொண்டாலும் ஏதாவது ஒரு ஓட்டை


நிகழ் காலம்

 

 குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு சிந்தனையில் இருந்தாள். வீட்டிற்கு ஒரே பெண். அவள் பிறந்த வீடோ நகரத்தை தள்ளி வெகு தொலைவில் இருந்ததால் சொந்த பந்தங்கள் முக்கிய காரணத்திற்காக மட்டுமே அவர்கள் வீட்டிற்க்கு வந்து சென்றனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டால் நாய் குறைக்கும் சத்தமும், கும்மிருட்டு அமைதி மட்டுமே இருக்கும். யாருடன் பேசுவது? உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அம்மாவுடன்