கதையாசிரியர் தொகுப்பு: திலகவதி

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல்

 

 வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை. எனக்கும்தான் வேலை கெடைச்சது. சங்கம் பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மையத்திலே மொழி பெயர்ப்பாளர். போதாக் குறைக்கு இருபத்தியேழு வயசாகியும் சலிக்காம பார்ட்-டைம்லே பி.எச்டி வேறே பண்ணிகிட்டிருக்கேன். இருந்தும் என்ன? நிம்மதியாவா இருக்கேன்… இல்லியே…சரியாச் சொல்லணுமின்னா வேலை கெடைச்சதிலே இருந்துதான் நிம்மதி இல்லாம இருக்கிறேன்னு சொல்லணும். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்த அன்னிக்கு அம்மாவெல்லாம் அழுதே அழுதுட்டாங்க. பின்னே


அவசரம்

 

 அம்மா சொன்னது. பழனிக்கு சந்தோஷம் தந்தது: “ஏண்டா பழனி ராசிபுரம் வரைக்கும் போயி உங்கக்காகிட்ட இந்தத் தொகையைக் குடுத்துட்டு வந்துடறியா? உங்க மாமா வேற வெளியூரு போயிருக்குதாம். சொன்ன தேதிக்கு வாங்கனவங்களுக்குத் திருப்பித் தரணுமில்ல…” அவனுக்கு ராசிபுரம் பிடிக்கும். ருக்மணியக்காவையும் பிடிக்கும். ஏன் பிடிக்காது? அவளுக்குத்தான் தம்பி மீது எவ்வளவு பிரியம். பழனி பரீட்சையில் பாஸ் செய்து பள்ளிக்கூடப் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டான் என்பது தெரிந்ததும் அவள் வேலை மெனக்கெட்டு ஊருக்கு ஓடி வரவில்லையா? பள்ளிக்கூடக்


வதம்

 

 2.9.99 பைத்தியக்கார நிலா. வெறி பிடித்து வழிந்தது. அதனுடன் ‘மேசையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிடவேண்டும்.’ மாyaa காவ்ஸ்கியின் விருப்பம். பாவி கடவுள் இவனைப் பார்த்தால் தொப்பியைத் தூக்கி மரியாதை செய்ய வேண்டுமாம். வார்த்தைகளில் நெருப்பு. பேப்பர் எரியுமோ? பாரதிக்குக் கூட வார்த்தை மந்திரம். நிறைய்ய வேலை. பைகொள்ளாத வேலை. இன்று பார்த்து லலிதா அவள் மேசையில் கவிழ்ந்து படுத்து அழுதாள். என்ன என்றதற்கு ஒண்ணுமில்லை என்று பதில். ஒண்ணுமில்லாததற்கா ஒருத்தி அழுவது. அவள் சிநேகிதன் ஏதாவது


ஒப்பனை

 

 பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம் இல்லை. அதனால் கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. மழைக்கு முன்னால் வரும் காற்று போல மாளாத துயரத்துக்கு முன்னால் வந்தது பூமிநாதனுக்கு வியாதி. அதற்கு முன்பே வந்துகுடி புகுந்தது வறுமை. எல்லா சினிமாக் கலைஞர்களையும் போல அதற்கும் முன்னதாகவே வந்து தொற்றிக் கொண்டது குடிப்பழக்கம். நளினி கைப்பையில் இருந்த சில்லறையை எண்ணிப் பார்த்தாள். தேறவில்லை. துருப்பிடித்துக்கிடந்த தகரப்


உள்ளூர்க்காரன்

 

 மதிய உணவுக்குப் பின் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு, `எல்லையற்ற பனியும் காடும்’ என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன், எழுத்தர் சூ ஃபாங் உள்ளே வந்து, `சென் அய்யா! உங்களோட சொந்த ஊர்லருந்து ஒருத்தர் வந்து, வெளியில காத்திருக்காரு. அவரு உங்களைப் பார்க்கணுமாம்.’ என்றார். `நெஜமாவா? யாரு அவரு? அவரு என்னோட சொந்த ஊர்க்காரருன்னு உனக்கு நிச்சயமாத் தெரியுமா?’ நான் எழுந்து, புத்தகத்தை படுக்கையருகே இருந்த மேசை அருகே வைத்தேன். `ஆமா. அவரு உங்களைப் பாக்க விரும்பறதா சொல்றாரு.’


ஆறடி நிலம்

 

 உண்மையில் நானும் என் மனைவியும் விவசாயிகள் இல்லை. என் மனைவி லீரிஸ் கூட விவசாயி இல்லை. நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கை அடுத்த ஒரு முக்கிய சாலையிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பாலிருந்த இந்த இடத்தை, அது எங்களுக்குள் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை உருவாக்கும் என்ற எண்ணத்தில் வாங்கினோம் என்றே நான் கருதுகிறேன். எங்களுடையதைப் போன்ற ஒரு திருமணத்தைப் பற்றி ஏராளமான பிதற்றல் வார்த்தைகள் சொல்லப்படுவது உண்டு. திருமணம் என்றதும் திருப்தியோடு கூடிய ஒரு ஆழ்ந்த மௌனத்தைத் தவிர, நாம் வேறு


பின்னோக்கி

 

 இன்று, நான் பிறந்ததற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வரும் ஏப்ரல் 15-ம் நாள். ஜன்னல்கள் குலுங்கிக் கடகடக்க இரயில் வண்டி இருளைக் கிழித்தபடி என் ஒருவனுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வேகத்தின் தாக்கம் ஒவ்வொரு இரும்புப் பலகையிலும் பரவியிருக்க வேண்டும். எல்லாமும் சேர்ந்து பயங்கரமாக அதிர்ந்து துடிக்கின்றன. நானும் அசைந்து அதிர்கிறேன். அந்த அதிர்வுகள், என் உடலின் ஆழத்தில் எங்கோ பரவி என் உறுப்புகளின் அமைப்பை சுருளச் செய்து, மின்னோட்டம் பாய்ந்ததைப் போலச் சீண்டிக் கிளறி, நோய்


சகோதரர்கள்

 

 பள்ளியாசிரியரின் பெயர் பார்ட். அவருக்கு ஆண்டெர்ஸ் எனும் சகோதரர் ஒருவர் இருந்தார். அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள். ஒருவரைப்பற்றியொருவர் சிந்தித்தவண்ணமாக இருந்தார்கள். ஒன்றாகவே இராணுவ சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒன்றாகவே நகரத்தில் வசித்தார்கள். ஒன்றாகவே போருக்குப் போனார்கள். ஒரே படைப்பிரிவில் பணியாற்றினார்கள், இருவருமே `கார்ப்பொரல்’ நிலைவரை பதவி உயர்வு பெற்றார்கள். அவர்கள் போரிலிருந்து வீடு திரும்பியதும்,அவர்கள் இருவரையுமே திடகாத்திரமான சிறந்த மனிதர்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். பிறகு அவர்களுடைய அப்பா காலமானார். அவர் நிறைய சொத்துக்களை வைத்து விட்டுப்


சிவப்புக் கல் மூக்குத்தி

 

 நகலெடுக்கும் இயந்திரம் வீட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, பாம்ஜி, `ஏற்கெனவே நீ இந்தியர்களைப் பத்தி முதுகுல தூக்கிச் சுமந்துகிட்டு இருக்குற பிரச்னை மட்டும் உனக்குப் போதாதா?’ என்று கேட்டான். திருமதி. பாம்ஜி தன்னம்பிக்கைக் குறையாதவளாக, தன் ஓட்டைப் பல் தெரிய புன்னகை செய்தபடி, `அதனால என்ன யூசுஃப்? நம்ம எல்லாருக்கும் அதே தொல்லைங்க இருக்கத்தானே செய்யுது!’ என்றாள். `என்கிட்ட அப்படிச் சொல்லாதே! நாம போகிற இடத்துக்கெல்லாம் கடவுச் சீட்டை எடுத்துக்கிட்டுப் போகவேண்டியதில்ல. கடவுச்சீட்டுங்களுக்கு எதிரா ஆதிவாசிக் கருப்பருங்க போராடட்டும்; அவங்க


இத்தாலிய கம்பளிச் சட்டை

 

 பத்தாண்டுகளான அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை பொறாமை ஒருபோதும் பாதித்ததில்லை. அவர்களைச் சுற்றி இருந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி நடந்து கொண்டிருந்தது என்பதை கவனித்த அவர்கள், அடிக்கடி, அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு நல்ல திருமண வாழ்க்கை என்று சொல்லிக்கொள்வார்கள். “நம் வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமில்லை” என்று அவன் சுருக்கமாக சொல்லிவிட்டு, அவள், (அவர்களுடைய திருமணத்துக்கு முன்பாக, அவள் பழகிக்கொண்ட)வேடிக்கையான `கிரீச்’ என்ற தன் சிரிப்பொலியினால் அதை உறுதி செய்யும்வரை காத்திருப்பான். அவள், “நாம் புத்திசாலிகள், நாம்