கதையாசிரியர் தொகுப்பு: திருமலை வீ.என்.சந்திரகாந்தி

3 கதைகள் கிடைத்துள்ளன.

என்னவென்று சொல்வதம்மா

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மறுதினம் வளைகுடா நாடுகள் சிலவற்றிற்கு பணிப்பெண்களை அனுப்புவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையாக முகவர் நிலைய வான் ஒன்று பட்டணத்தைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தது… நானும் எனது குழந்தையுடன் தாயாரும் பின் ஆசனமொன்றில் அமர்ந்திருக்க பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே வண்டியில் ஏற்றப்பட்டிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற பயணம் ஒன்றினை நான் மேற்கொண்டிருந்தேன். உயர்தர வகுப்பு


காதலே மௌனமானால்…

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைநகரிலிருந்து இருநூறு கிலோமீற்றர்களுக்கு சற்று அதிகமாக உள்ள தனது இலக்கை நோக்கிப் புறப்பட இருந்த அந்த அதிகாலை கடுகதி ‘இரயிலில்’ மூலை ஆசனம் ஒன்றினைப் பிடித்து வசதியாக அமர்ந்துகொண்டேன். சனநெரிசல் இல்லை. எதிரிலே என்னைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம் மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் சிறிது பதட்டத்துடன் ‘பிளாட்பாரத்தையும்’ தனது கை கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சாதாரண ஆடையில் அவன்


மலரத்துடிக்கும் மொட்டு

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்கோணமலை பிரதேச செயலக (பட்டணமும் சூழலும்) சாகித்ய விழா 2002 மற்றும் திருக்கோணமலை மாவட்ட இலக்கிய விழா 2002 ஆகியவற்றிற்கான திறந்த சிறுகதைப் போட்டிகள் இரண்டிலும் முதலாவது பரிசு பெற்ற சிறுகதை வானத்தை ஓவிய சுவராகக் கொண்டு செங்குத் தாக வரையப்பட்ட நெடுங்கோடுகள் என நெடிதுயர்ந்த பனைமரங்கள் செறிந்து நிற்கின்றன.காலைக் கதிரவனின் செம்மஞ்சள் நிற ஒளிக்கற்றைகள், தலை சிலுப்பி நிற்கும் பனை மரங்களின்