கதையாசிரியர் தொகுப்பு: தர்மராஜ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளைக்கத்ரி

 

 வெள் விழியை சுற்றிய கரு வெளியைப் போல் இரவின் அழகு இதமாய் ஜொலித்தது. கோபுரகலசத்தின் உச்சி முனையில் வெள்ளிப் பந்தை உருட்டி வைத்தார் போல் பெளர்ணமி நிலா நழுவி விழாமல் நடு நாயமாய் நின்றதை நான் மட்டும் ரசித்தேனா? இல்லை என்னை போல் எந்த சுமையையும் ஏற்றி கொள்ளாமல் முதுகையும், மூளையையும் வெற்றிடமாய் வைத்துக் கொள்ளும் பலரும் ரசித்திருப்பார்களா என்று என்னால் தெளிவாய் சொல்ல முடியவில்லை. வேலை பளு இல்லை என்று நான் பெருமையடித்து கொண்டாலும் எனக்கு


தழும்பும் அழகு

 

 “நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது அணைத்து வைக்கபட்டுள்ளது, சிறிது நேரத்திற்கு பின் தொடர்பு கொள்ளவும் “ இதை சொல்லும் அந்த குரலுக்கு தெரியாது இவன் 50 நிமிடங்களாய் அதே குரலை, 1௦௦ தடவைக்கு மேல் கேட்டுவிட்டான் என்று. ஆனாலும் அவனால் அதனை கேட்காமல் இருக்க முடியவில்லை. பலமுறை பலகுறைகளை சொல்லி வரங்களை கேட்டு வணங்கிய தெய்வம் எதுவும் செய்யாமல் கல் போல் அமர்ந்த போதிலும், மீண்டும் சென்று வணங்கும் பரம பக்தனை போல் அந்த பதிவிட்ட