கதையாசிரியர் தொகுப்பு: டி.எஸ்.வேங்கட ரமணி

1 கதை கிடைத்துள்ளன.

மிஷ்லா

 

 மிஷ்லாவின் போட்டோவும் பெயரும் இன்று காலைப் பேப்பர்களில் வந்துள்ளன. இன்று மிஷ்லா என்றால் யாருக்கு தெரியப் போகிறது? இப்போது அவள் பரவலாக அறியப்படும் பெயர் ராஜலட்சுமி ஐ.ஏ.எஸ். ஐ.ஏ.எஸ்.ராஜலட்சுமி எனக்கு மனசுக்குள் வரவே மாட்டேன் என்கிறாள். என் மனசில் இன்னும் நிற்பதெல்லாம் இரட்டைப் பின்னல், செஞ்சாந்துப் பொட்டு, பாவாடை தாவணியில் எப்போதும் குறுகுறுப்பாக இருக்கும் சுட்டிப் பெண் எச்சுமி, மிஷ்லா என்று புனை பெயர் சூட்டிக்கொண்டு, கொட்டு முரசு கையெழுத்துப் பத்திரிகையிலும், இளம் கவிஞர்கள் அரங்குகளிலும் லட்சியக்