கதையாசிரியர் தொகுப்பு: ஜே.எம்.சாலி

4 கதைகள் கிடைத்துள்ளன.

காயம்

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கையில் கத்திக் குத்து விழுந்திருந்தது. கட்டுப் போட்டிருந்தாலும் சுதாவுக்கு வலி இருந்து கொண்டிருந்தது. கழுத்திலோ மார்பிலோ விழுந்திருக்க வேண்டிய கத்திக் குத்து, குறி தவறியிருக்கலாம் அப்படி ஏதாவது ஆகியிருந்தால் சுதா இந்த நேரம் வீட்டில் படுத்திருக்க முடியுமா? விடியுமுன் அந்தக் களேபரம் நடந்தது. சாதாரண சம்பவமாக நினைக்க முடியவில்லை. ஒரு கொலை முயற்சியா? அந்தக் காலை நேரத்திலும் கூட்டம் வீட்டில் திரண்டு விட்டது.


சிகிச்சை

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். கொடி மாதிரி உடல்வாகு, அதற்காகவே மலர்க்கொடி என்று பெயர் வைத்திருப்பார்கள் போல் இருக்கிறது. ராஜம் அப்படித்தான் நினைத்தாள். மலர்க்கொடியை அவளுக்குப் பிடித்துவிட்டது. தாய்க்குப் பிடித்தால் சேகருக்கும் பிடித்த மாதிரி தான். மறுக்கமாட்டான். தாய் சொல்லைத் தட்டக் கூடிய பிள்ளை இல்லை. இரண்டு மூன்று மாதமாகவே ராஜத்திற்கு இதே வேலை. மகனுக்குப் பெண் பார்க்கும் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறாள்.


அந்த நாள்…

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மல்லிகா காலண்டரைப் பார்த்தாள். 1960 மே மாதம் பன்னிரண்டாம் தேதி. ஒருவாரக் கப்பல் பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. பயணக் களைப்பு இப்பொழுது இல்லை; ஆனால் மனத்தில் களைப்பு இருக்கிறது. இருக்கிறது. கப்பல் ஏறி கடல்கடந்து சிங்கப்பூருக்கு வருவோம் என்று மல்லிகா நினைத்துப் பார்த்தவள் அல்ல. அப்படி ஒரு கனவோ கற்பனையோ கடந்த காலத்தில் அவள் மனத்தில்


சரண்

 

 அவன் யார்? “”என்ன பேரோ தெரியலீங்க. சுருக்கமா அறம்னு எல்லாரும் சொல்றாங்க. வேலை, மேல்படிப்பு, ஆராய்ச்சின்னு வெளிநாட்ல தங்கிட்டு இப்ப திரும்பியிருக்கிறாராம். வயசு நாப்பத்தஞ்சு இருக்கலாம்…” பெரியநாயகிக்கு விவரம் தரத் தொடங்கினார் உத்ரா. “”பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் கூடுது. எல்லா விஷயமும் இவருக்குத் தண்ணிபட்ட பாடுன்னு பெருமையா பேசிக்கிறாங்க. தத்துவம், தன்னம்பிக்கை, சாஸ்திரம், விஞ்ஞானம் எதைப்பத்தியும் இவரைப்போல பேசமுடியாதுன்னு சொல்லிக்கிறாங்க” “”கேட்டிருப்பீங்களே…” அடிக்குரலுடன் பேசிய உதவியாளரைக் கவனித்தாள். “”ஆமாங்க. கூட்டத்தை வசப்படுத்திக் கட்டிப்போடற மாதிரி பேச்சில