கதையாசிரியர் தொகுப்பு: ஜெயமோகன்

70 கதைகள் கிடைத்துள்ளன.

நாகம்

 

 வாசற்கதவு தட்டப்பட்டது. கூந்தலை வாரிச்சுருட்டிக் கொண்டாள். கொண்டையை முடிந்தபடி கதவை அணுகிக் கொண்டியை எடுத்தாள். இற்றுப்போன மாம்பலகைக் கதவு. அதன் இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த் தாரைகளின் தொடுகை போலிருந்தன அவை. வெளியே மழை பெய்து ஓய்ந்திருக்கவேண்டும். கதவைத் திறந்து, வெளியிருளில் மினுங்கிய இரு கண்ணாடிக் கண்களைப் பார்த்தாள். நாகம் ஆளுயரத்திற்குத் தரையிலிருந்து பத்தி தூக்கி நின்றிருந்தது. வெளிக்காற்றில் நீர்த்திவலைகள் கலைந்திருந்தன. முற்றத்து மரங்களெல்லாம் கிழக்குப் பக்கமாகச் சாய்ந்து கொந்தளித்துக்


கெய்ஷா

 

 அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒரு பெயர் போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால்


கயிற்றரவு

 

 மே மாத மாலைநேரம். நாகர்கோயில் கிளப்பின் பெரிய திண்ணையில் ராணுவத்திலிருந்து இரண்டாம்விலைக்கு பெறப்பட்ட பெரிய இரும்பு மடக்குமேஜையின் இருபக்கமும் போடப்பட்ட இரும்புநாற்காலிகளில் காப்டன் பென்னி ஆண்டர்ஸனும் , லெஃப்டிண்ட்ண்ட் ப்ரியன் பாட்ஸும் அமர்ந்து பானைநீரில் போட்டு குளிரச்செய்யப்பட்ட பீரை பெரிய கண்ணாடிக்குடுவைகளில் அருந்திக்கொண்டிருந்தனர். திண்ணையின் கூரையை ஒட்டி அதுவரை வெயில்காப்புக்காக தொங்கவிடப்பட்டிருந்த வெட்டிவேர்த்தட்டிகள் சுருட்டி மேலே கட்டப்பட்டிருந்தன. அவற்றில் நீர் தெளிக்கப்பட்டிருந்தமையால் இளங்காற்றில் மென்மையான புல்மணம் எழுந்தது. அப்பால் ஸ்காட் கிறித்தவப்பள்ளியின் விரிந்த செம்மண் மைதானத்திலிருந்து மதியம்


பெரியம்மாவின் சொற்கள்

 

 வா,போ,நில்,சாப்பாடு, துணி,மகன், மகள், சாலை,வீடு, வானம், பூமி, ராத்திரி, பகல் எல்லாம் ஓரளவு எளிதாகவே வந்துவிட்டது. நான் தமிழில் அச்சொற்களைச் சொன்னால் பெரியம்மா அவற்றுக்கான ஆங்கிலச் சொற்களைச் சொல்வாள். நான் சொல்வதில் ஓர் ஒழுங்கு இருப்பது நான் பூ என்று சொல்வதற்குள்ளாகவே பெரியம்மா cat என்று சொன்னபோது எனக்குத் தெரிந்தது. ஆகவே அடுக்கை மாற்றினேன். ஆனால் பெரியம்மா என் கண்களைபார்த்தே சொல்லத் தொடங்கினார்கள். நான் அம்மிருகங்களைச் சுட்டிக்காட்டி அவை என்ன என்று கேட்டேன். பெரியம்மா தமிழில் நாய்,


ஏறும் இறையும்

 

 இரு காதுகளும் முழுமையாகவே கேட்காமல் ஆனபிறகுதான் சுத்த சங்கீதத்தின் வாசல் திறந்தது என்று ராமையா வெற்றிலை மீது சுண்ணாம்பை மென்மையாகத் தடவியபடி சொன்னார். கும்பகோணத்துக்காரர்கள் வெற்றிலை போடுவது தனி லாகவம். கும்பகோணம் வெற்றிலைகூட நன்கு முற்றிய நெல்லிக்காய் போல ஒரு கண்ணாடிப் பச்சை நிறத்துடன் இருக்கிறது. “இப்ப கண்ணை சும்மா மூடிண்டா போரும். கல்யாணியிலயோ மோகனத்திலயோ வைரவியிலயோ எந்த இடத்தை வேணுமானாலும் பாத்துடலாம். ஒரு தடையும் கெடயாது. தடைன்னா என்ன? கேட்டியா சாம்பா, எது சங்கீதத்தை உண்டு


முடிவின்மையின் விளிம்பில்

 

 உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவாகரத்தாகித் தனியாக வாழ்கிறார். அமெரிக்காவில் ஃபுளோரிடாவில். ஊர் பெயர் வேண்டாமே என்றார். நல்ல முதலீடு இருப்பதனால் தன் பண்ணை வீட்டில் மீன்பிடித்தும், பன்றி வளர்த்தும், கவிதை எழுதியும், மின்னரட்டை அடித்தும் வாழ்கிறார். கவிதைகள் தொகுக்கப்படவில்லை. ஆனால் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது ஃபிரெடி ஒரு நாவலை எழுதி முடித்திருந்தார். ஃபிரெடிக்கு முழுத்திருப்தி வராத


சிவமயம்

 

 பாடல் பெற்ற ஸ்தலம். வசை என்று சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிற போக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும் நடராசனை எட்டுவாரி இடக்குப் பண்ணிவிட்டுப் போனார். பிறகு வந்த ராஜாக்கள் கற்றளி எழுப்பி, அறுபத்து மூவரைக் குடியமர்த்தி, பெரியநந்தி செதுக்கி, சுற்றியுள்ள தெருக்களை அக்ரஹாரமாக ஆக்கி, உற்சவம், தேரோட்டம், உலா என்று ஒழுங்கு பண்ணிப் புண்ணியம் அடைந்தார்கள். ஒரு பத்து தலைமுறைக்கு செல்வாக்காகத்தான் இருந்தார் சுகவனேஸ்வரர். அப்புறம் தெப்பக்குளக்கரை பிள்ளையார், திடீர் மவுசு பெற்று காணிக்கை


கரடி

 

 ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும் ஒரு வேர்கூட மயிரில்லாமல் நன்றாக மழித்து மஞ்சளும் விளக்கெண்ணையும் கலந்த பிசினை அதன் மேல் பூசி வழித்துவிட்டு அரைமணிநேரம் அமர வைத்தபின் துணியால் கீழ்நோக்கித் துடைப்பேன். அதன்பின்னர்தான் முட்டையும் பன்றியிறைச்சியும் கலந்த கோதுமைத்தவிடு உணவாக அளிக்கப்படும் என்று அதற்குத்தெரியும். நான் என் கைகளைத் துடைத்துக் கொண்டிருக்கும்போதே எழுந்து உணவுக்குச்செல்லத் தயாராகிவிடும்.இது 1962ல் நடந்தது. அப்போது நான்


நச்சரவம்

 

 வரலாற்றில் உள்ள நுட்பமான ஒரு சிக்கலை நாம் வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் உறுதியான தகவல்கள் மூலம் திட்டவட்டமாக உருவாக்கப்படுகிற ஒரு கட்டுமானம் போல்தான் வரலாற்றைக் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். தங்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல வரலாற்றை முன்வைத்து விவாதிக்கிறார்கள். வரலாற்றுக் கோட்பாட்டாளன் என்ற முறையில் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் வரலாற்றை ஒரு நாடகமேடையின் பின்புறத் திரைச்சீலைகள்போல உருவகிக்கிறேன். நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப கணநேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்கிறோம். வீடுகள், மலையடிவாரம், கடற்கரை,


விருது

 

 டெல்லிக்கு அப்பாவுடன் சென்றிருக்கவேகூடாது என்று அவன் நினைத்துக்கொண்டான். ரயிலில் இருவர் மட்டும் அமரக்கூடிய சிறிய அறைக்குள் அவர் வெளியே பார்த்துக்கொண்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார். அவருக்குப்பதில் அங்கே அவரது ஆளுயர போஸ்டர்படம்தான் ஒட்டப்பட்டிருக்கிறது என்று அவன் நினைத்துக்கொண்டான். அவரைவிட அவரது போஸ்டர்களைத்தான் அவன் அதிகமும் பார்த்திருக்கிறான். அவன் சின்னக்குழந்தையாக இருக்கும்போதுதான் அப்பாவின் படம் போஸ்டர்களில் வர ஆரம்பித்தது. மருதங்குழி முக்கில் அச்சுதன்மாமனின் டீக்கடை வாசலில் வைக்கப்பட்ட தட்டியில் ஒட்டப்பட்டிருந்த மூன்றுவண்ண போஸ்டரில் நசீரும் ஜெயபாரதியும் முகத்தோடு முகம்