கதையாசிரியர் தொகுப்பு: ஜி.பி.இளங்கோவன்

1 கதை கிடைத்துள்ளன.

பேருந்து நிற்குமிடம்

 

 போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து இன்றோடு நாற்பது வருடங்கள் கடந்து விட்டன. மாலையில் ஓய்வுபெற்று கழுத்து மாலையோடு வீடு திரும்பும்போது என்னோடு பணிபுரிந்த நண்பர்களும் கூடவே வந்தனர். அவர்களுக்கு மனைவி சங்கீதா எளிமையான ஒரு சிற்றுண்டியை ஏற்பாடு செய்து வைத்திருந்தாள். எல்லோரும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு வேண்டியதைக் கேட்டு சங்கீதாவும் மகள் கலையரசியும் அன்போடு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை. விசாரிக்க வந்த நண்பர்களிடம் கையைக் கொடுப்பதும், விடுவிப்பதுமாக நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நெருங்கிய நண்பர்களில்