கதையாசிரியர் தொகுப்பு: ஜான்சிராணி தனபால்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

 

 அது ஜுரோங் பலதுறை மருந்தகம். காலை வேளை என்பதால் நோயாளிகளின் கூட்டம் நிரம்பியிருந்தது!; கோவிட்19 நடமாட்டக் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்ட காலக் கட்டம். ஆயினும் நோயாளிகளும் அவர்கள் உடன் வந்தவர்களும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தனர்! எல்லாருமே முகக் கவசம் அணிந்திருந்தனர். தாங்கள் செல்ல வேண்டிய அறைகளுக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகளில் இடைவெளி விட்டு அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். மருத்துவ ஊழியர்கள் மட்டும் அங்குமிங்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். நோயாளிகள் அவர்களுடன் துணை வந்தவர்கள் என இருந்த கூட்டத்தில் ஒருத்தியாக


பரிசுப்பொருள்

 

 பத்து வயதான வாசு பரபரப்பாக வண்ண காகிதங்களை கொண்டு எதையோ செய்து கொண்டிருந்தான். முகத்தில் வியர்வைத் துளிகள், சட்டை நனைந்திருந்தது. அடிக்கடி தன் அறைக் கதவைப் பார்த்துக் கொண்டான். அம்மா வந்துவிடப் போகிறார்கள் என்ற பயம்! எழுந்து போய்க்; கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தான். பின்னர் மீண்டும் தரையில் அமர்ந்து தன் வேலையைத் தொடங்கினான். எதையோ மறந்து விட்டவன் போலத் தன் பக்கத்தில் இருந்த மடிக்கணினியைத் தட்டினான். அதில் தெரிந்த காணொளியைத் திரும்பப் பார்த்தான், தான்


தேவதையைக் கண்டேன்!

 

 ஞாயிற்றுக்கிழமை, காலைப் பொழுது. பலருக்கு அன்று ஒரு நாள்தான் ஓய்வாக இருக்கும் நாள். எனக்கும் தான். நான் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட நேரம் தூங்கி எழுவேன். அம்மா செய்து வைத்திருக்கும் சிற்றுண்டியைச் சுவைத்துச் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிடுவேன். இரவு ஏழு மணிக்குப் பிறகுதான் மறுநாள் வேலைக்குப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வரும், கூடவே பதற்றமும் ஏற்படும். இன்று ஏனோ சீக்கிரம் எழுந்துவிட்டேன். குளித்துவிட்டு வந்த எனக்கு மேசையில் தயாராய் இருந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டுக் கூடத்தில்