கதையாசிரியர் தொகுப்பு: சோலை சுந்தரபெருமாள்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும்…

 

 பாக்கியத்துக்கு முழிப்பு வந்து ரொம்ப நேரமாயிட்டு. புரண்டு புரண்டு படுத்தாள். குளிரும் ஜாஸ்தி. எரவாணம் வழியாய் ‘சல் சல்’ன்னு பனி வாடை வீட்டுக்குள் எம்பி குதித்தது. வெளியே பட்டப் பகல் போல நிலா. நாளான்னிக்கு மாசி மகம். அதுக்கான வீரியம் இல்லாம்யா போவுதுன்னு நினைத்துக் கொண்டாள். தலைக்கு மேல் கூரையிலிருக்கும் ஓட்டைகளின் வழியாக நுழைந்த நிலாச் சக்கரங்கள் மெல்ல இறங்கி அவள் மேலும், அவளை ஒட்டிப்படுத்துத் தூங்கும் மவள் மீதும் புள்ளி புள்ளியாய்… கால்மாட்டில் பஞ்சாரத்தில் கவித்திருந்த


உழைப்பு

 

 அம்மாக்கண்ணுவின் மனதில் இளஞ்சூடு பரவியது. “”””என்னாங்குற! வெள்ளன வந்து சேரு…”” சொல்லிவிட்டு விடியலுக்கு முன் பெரியான் எழுந்து போய் நீண்ட நேரமாயிற்று. அவரசமாக வேலைகளை முடித்தவள் ‘பாழாப்போன மழ பேஞ்சு மூணு மாசமாச்சு’ என்ற முணுமுணுப்புடன் வெட்டுக்கூட்டையுடன் வெளியே வந்தாள். தென்றல் சிலுசிலுவென்று அவள் முகத்தில் பரவியது. ‘இந்த தென்னலு ஒரு மாசத்துக்கு முன்ன வீசியிருந்தா பயறு நல்லாக் காச்சிருக்கும். மாடுகளவுட்டு மேச்சிருக்க வேண்டாம்…’ நினைத்துக் கொண்டவள் இன்னும் இரண்டு நாளுகளுக்குள் ஊற்று வெட்டித் தண்ணி இறைக்காவிட்டால்


மண்ணாசை

 

 இந்தாப் போச்சு அந்தாப் போச்சுன்னு மூணுமாசமா இழுததுப் புடுச்சிக்கிட்டுக் கெடக்கும் பட்டாளத்தாருக்கு இன்னும் தெக்க போய்ச் சேர நேரம் காலம் வர்லங்கிற பேச்சு தான் ஊர் சனத்துக்கு பட்டாளத்தாரு யாருன்னு கேட்டா நேத்திக்கு கண்ணு முழிச்சுப் புள்ளங்கூட அடையாளம் காட்டிப்புடும். அவரோட பேரச்சொன்ன மொதத் தலைமுறை ஆசாமிங்களுக்குக் குட சட்டுன்னு நெனைப்பு வராது. கூடவே தோப்பூட்டுக்கார கோவிந்தம் புள்ளன்னு அடையாளத்தக் குறிப்புட்டாத்தான் மட்டுப்படும். அவரு பட்டாளத்தவுட்டு வந்து ரெண்டு மாமாங்கமா ஆயிட்டு அவரோடபட்டாளத்துச் சேவையைப் பாராட்டி, கலெக்டரு