கதையாசிரியர் தொகுப்பு: செ.ப.பன்னீர்செல்வம்

1 கதை கிடைத்துள்ளன.

இப்படியும் ஒரு நாய்

 

 ஆங்கில மூலம் : ஆர்.கெ.நாராயன் (A blind dog) தமிழில் : செ.ப.பன்னீர்செல்வம், சிங்கப்பூர் அது ஒன்றும் மேல்நாட்டு நாயல்ல. சாதாரண தெருநாய்தான். தெருவிலேயே வளர்ந்து, சந்தைப் பகுதியில் குப்பைத் தொட்டிகள் நிறைந்திருக்கும் வட்டாரத்தையே சுற்றி சுற்றி வரும் நாய்தான். தெருநாய்களுடன் சண்டையிட்டே வளர்ந்து வந்ததால், உடலெங்கும் அதற்கான அடையாளங்கள் பதிந்திருந்தன. அந்தக் கடைத் தெருவின் கிழக்குச் சந்தை முகப்பில்தான் அது பெரும்பாலும் சுருட்டிக் கொண்டு படுத்திருக்கும். மாலை வேளைகளில் மறுபடியும் தெருக்களைச் சுற்றிவிட்டு அதே இடத்துக்கு