கதையாசிரியர் தொகுப்பு: செ.பி.இராசாராம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மருதியான்

 

 சோகங்களே உருவாகத் தன் துணைக்கு யாரும் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனிமையில் அமர்ந்திருக்கிறான் ‘செல்லா’. அவன் முகத்தில் பயம் தெரிகிறது. அவன் உடம்பெல்லாம் வியர்த்து இருக்கிறது. தலை குனிந்தபடியே முகத்திலும், உடம்பிலும் எவ்வித அசைவுகளும் இல்லாமல் அமர்ந்திருக்கிறான். “இரத்த பரிசோதைனையின் முடிவில் விபரீதமாக ஏதும் சொல்லிவிடுவார்களோ” என்று அவன் மனம் நடுங்குகிறது. “தனக்கு ஏதும் ஆகிவிடுமோ? தன்னை நம்பியுள்ளவர்கள் அனாதையாகி விடுவார்களோ” என்று நினைத்துக்கொண்டிருக்கிறான், செல்லா. தன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன்


ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

 

 வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன் இருக்கும் களத்துமேட்டில் குவித்துக்கொண்டிருக்கின்றனர் ‘மலர்கொடி’ உட்பட ஐந்து பெண்கள். அதை நல்லதும் கெட்டதுமாக தரம் பிரித்துக்கொண்டிருக்கிறான் ‘கிறுக்கா என்ற கிட்ணா’. இவனுக்கு கிறுக்கா என்ற பட்டப்பெயர் வைத்தது கொட்டத்தில் அமர்ந்திருக்கும் இவர்களின் முதலாளி ‘மீனாள்’. கிட்ணா சிறுவயதில் இருந்தே இவர்களின் தோப்பில் ஊழியம் பார்பவன். மீனாளின் கணவன் ‘மட்டியூரான்’ வெளியூரில் படிக்கும் கிட்ணாவின் மகன் பெயரில்