கதையாசிரியர் தொகுப்பு: செ.ஜெயஸ்ரீ

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஏதோ ஒன்னு இருக்கு…

 

 சிந்துவிற்கு எழுத்தாளர் சுஜாதா எழுதிய புத்தகங்கள் மீது மோகம். அன்றும் வழக்கம் போல வாசலில் தன்னை மறந்து “மூன்று குற்றங்கள்” வாசித்துக் கொண்டிருந்தாள். “வெளக்கேத்துற நேரமாச்சே.. மூஞ்ச கழுவி பொட்டு வச்சு தலைசீவி லட்சணமா இருப்போம்னுலாம் தோணாது… தொடப்ப கட்ட… போயி அந்த சைலஜாவ பாரு… ” மீண்டும் சிந்துவை வசைப்பாடினாள் அவள் அம்மா விசாலம். “சரி நான் போய் அப்ப சைலஜாவ பாத்துட்டு வரேன்… ” நீல நிற டாப்பின் மீது கறுப்பு நிற துப்பட்டாவை


பூம்பூம் மாடு

 

 மாலை 6 மணி அசோசியேஷன் சந்திப்பு துவங்கியது. அனைவரும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தனர். இந்த தீடீர் சந்திப்புக்கான காரணம் பலருக்கும் தெரியாது. பெரியசாமி தான் அசோசியேஷனின் தலைவர். மேலதிகார வர்க்கத்தின் பெரும்புள்ளி. மூக்கிற்கு கீழே காகம் பறப்பது போல பெரிய மீசை. பார்ப்பதற்கே படுபயங்கரமான கறார் ஆசாமி போல இருப்பார். ரமணியை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். அவள் மறுகணம் அவள் மூன்று வயது மகனை இடுப்பில் இறுக பற்றிக் கொண்டாள். “ராமசாமி.. நீங்க மட்டும்


அமானுஷ்ய மாற்றம்

 

 சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு ஊருக்கு தயாரானாள். தயாளன் தனது காரில் அவர்களை ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான். அவர்கள் ரயில் ஏறியதும் மிக பாசமாய் “மிஸ் யூ சுகந்தி” ஒரு வாரம் எப்படி இருக்க போறேனோ என்று செவலியர் சிவாஜி கணேசன் அளவிற்கு நடித்தான். ரயில் கிளம்பிய அடுத்த நொடி “ஹய்யா… என் பொண்டாட்டி