கதையாசிரியர் தொகுப்பு: சுகந்தி சுப்ரமணியன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

 

 எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின் ஏன் இந்த விரிசல்? நினைக்க நினைக்க எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத் திருப்பியபடி போகிறாள். எனக்குள் குழப்பமாக இருந்தது. நான் எதுவும் தவ்று செய்யவில்லையே எல்லோரைப் போலவும்தான் நான் இருக்கிறேன். நினைத்து நினைத்து முடிவே கிடைக்கவில்லை. ராணி வந்தாள். அவசரமாக வந்து ‘இன்னிக்கு உங்க வீட்ல கொஞ்ச நேரம் என் பிரண்டோட பேசணும். அனுமதி தர முடியுமா?’ என்று


மனசு ஒரு கதையாய்

 

 மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா, குலுங்கி நடந்துட்டனா, தூரத்து பெண்களுக்கு தூக்கி குடுத்தனா, இல்லாப் பொறப்புக்கு எடுத்து குடுத்துட்டனா, கட்டடா பல்லாக்க, காலமே போய் சேர்வோம் பூட்டடா பல்லாக்க புறந்திடம் போய்ச் சேர்வேன் என்று சொல்லி புறப்பட கணவன் வருகிறான். அவனிடம் துப்பிட்டுச் சொங்கழகா, துவண்டோ நடையழகா, உன்னப்பெத்த தாயாரு, ஊரறிய பேசறாங்க என்று சொல்கிறாள் மனைவி. மகன் தாயிடம், கடுகு


போட்டோ

 

 பரபரப்பாய் இருந்தது, ராமுத்தாயிக்கு. போட்டோவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணாடி உடம்போடு சேர குளிர்ச்சியாக இருந்தது. எத்தனை நாளாய் இப்படி ஒரு போட்டோ பிடிக்க வேண்டுமென்று அவளுக்குக் கனவுகள். இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது போலிருந்தது. போட்டோவைப் பார்த்தாள். ராமுத்தாயின் முகம் சுருக்கமாய் இருந்தது. எத்தனை கவலை ரேகைகள் முகத்தில். எத்தனை கஷ்டங்கள் வாழ்க்கையில், கஷ்டங்களும் அழுகைகளும் முகத்தில் ரேகைகள்போல ஆக்கிவிட்டது. வயதாகி விட்டதல்லவா இதற்குமேல் இதையெல்லாம் எதற்கு நினைக்கவேண்டும் என்று நினைத்தாள். ஒரு கையில் போட்டோவைப்