கதையாசிரியர் தொகுப்பு: சி.சந்திரபாபு

1 கதை கிடைத்துள்ளன.

ராஜதந்திரம்

 

 கதிரவனின் உக்கிரம் அந்தக் காலை வேளையில் பனித்துளிகளை சிதறடித்துக் கொண்டிருக்க எண்ணற்ற பட்சிகள் சிறகடித்துப் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அடர்ந்த அக்காட்டில் இயற்கை தனது பச்சை பசேல் என்ற புடவையை பாரபட்சமின்றி படரவிட்டிருந்தது. பட்சிகளின் ஒலி, எந்தவித சங்கீத ஒலிகளின் கட்டுப்பாட்டிலும் அகப்படாத வித்தியாசமான இசை. அந்த மலையினூடே மின்னல் கொடியென காட்சியளிக்கும் “சளசள’வென வெண்ணிற நீர்வீழ்ச்சி. இவற்றையெல்லாம் மீறி அந்த அமைதிப் பிரதேசத்தையே சீர் குலைக்கும் அந்த இளம் பெண்களின் சிரிப்பொலி அப்பப்பா… இயற்கைக்குத்தான் இறைவன்