கதையாசிரியர் தொகுப்பு: சித்திரா

1 கதை கிடைத்துள்ளன.

பறவைப் பூங்கா

 

 அந்தப் பழங்கால பிரிட்டிஷ் கட்டடத்தை விட்டு வெளியே நடந்தாள். வெயில் முகத்தைச் சுட்டெரித்தது. இதைப் போன்ற உயரமான மேற்கூரையும் வளைவுகளையும் நீளமான தாழ்வாரங்களையும் கொண்ட கட்டடம் இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். ராஃபிள்ஸ் பிளேஸில் இல்லை. டோ பிகாட் எம்ஆர்டி அருகில் மெக்டொனால்ட் ஹவுஸ் இதே போலத்தான் இருக்கும். உள்ளே போய்ப் பார்த்தால்தான் தெரியும். தினமும் நடந்து போகும் பாதையில் எதிர்ப்படும் மனிதர்கள், முகங்கள், உடைகள், வாசங்கள் பழகிவிடுவது போல் கட்டடங்களும் பழகிவிடுகின்றன.