கதையாசிரியர் தொகுப்பு: சாந்தி ரமேஸ் வவுனியன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

நான் அழுத இரவுகளில்…

 

 நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா அம்மாவே என்னை இன்னும் நம்பேல்ல….அன்ரி நம்பேல்ல…..மாமா நம்பேல்ல….சித்தப்பா நம்பேல்ல….நானேன் இப்பிடியிருக்கிறனெண்டு எனக்கே தெரியேல்லயக்கா….. என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லையக்கா…. ஏதோவெல்லாம் வந்து செய்யிறமாதிரியிருக்கு….. இரவிலை கனவிலை என்னை யாரோவெல்லாம் துரத்துறமாதிரியும், வெட்டுறமாதிரியும் இருக்குது….என்னாலை நிம்மதியா இருக்கேலாமக்கிடக்கு….கரையாத இரும்பான எனது கண்ணிலிருந்தும் கண்ணீர் வழிந்தோட என்னை நம்பி எனக்கு ஆறுதல் சொன்ன அக்காவிற்கு ஏன் நான் வன்முறையாளனானேன்?


அழுவதற்கில்லை வாழ்வு

 

 அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப் பார்வையை வீசுகிறேன். அம்மா….! சாதியெண்டா என்ன…. இதோ விழுந்து விடுவேனெனும் தறுவாயில் அவள் கண்களை நிறைத்திருந்த கண்ணீர் நதி காத்திருந்தது. இஞ்சை வாங்கோ ஏனிப்பிடிக் கேக்கிறீங்க……அவளை அணைத்துக் கேட்கிறேன். நான் சாதிப்புத்தியைக் காட்டிறனாமெண்டு தினேஷ்ன்ரை அம்மா றோட்டிலை வைச்சுச் சொல்றாம்மா….அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவிழ்ந்து கன்னங்கள் வழியே வழிந்து கொண்டிருந்தது. நீங்களின்னும் அவனை மறக்கேல்ல என்ன…..அம்மா….என்னாலை


நிழலின் தொடராய்…..!

 

 நெஞ்சிலிருந்து அவளைத் துரத்திவிடவும் முடியாது , மறந்து விடவும் முடியாது அவள் நினைவுகள். செத்துப்போவென்றெண்ணிய கணங்களில் அவளது வார்த்தைகள் நினைவுகளில் வந்து அதையும் நிறுத்தி வாழவேண்டும் எனச்சொல்லி 15 வருடங்களின் பின் இப்போ அவள் என் நினைவுகளைக் தோண்டி விட்டிருக்கிறாள். அவள் எனக்குள் எப்படி வந்தாள் ? கேள்விகள் எழும்போதெல்லாம் நான் இரை மீட்டு இனிக்கும் காரணங்கள் இப்போதும் நினைவில் நர்த்தனமிடுகிறது. அவள் பத்தாம் வகுப்பிலும் நான் ஏ.எல்.உயர்தர வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்த போதுதான் அவளுடனான பழக்கம் எனக்குக்