கதையாசிரியர் தொகுப்பு: சரளா முருகையன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நிதர்சனங்கள் நிர்வாணமானால்…

 

 தாயைப் பிரிந்து செல்லும் குழந்தை போல், தயங்கி தயங்கி மேல்திசை நோக்கி சென்று கொண்டிருந்தான் சூரியன். அவனது தயக்கத்திற்கு எந்தவித பலனும் இல்லையென்பதை உணர்த்துவது போல், திடீரென்று சூழ்ந்த கருமேகங்கள், அவனை முழுவதும் மறைத்தன. செய்வதறியாது திகைத்தாலும், சில நாட்களாக இப்படித் தானே நடக்கிறது, என்ற உணர்வில் கடமையை செய்யும் கண்ணியத்தோடு ஆதவனும் மறைந்து கொண்டான். சில வினாடிகளில் கருமேகங்கள் தாங்கள் சுமந்து கொண்டிருந்த நீரை மழையாகப் பிரசவித்தன. மழையின் தூரலைக் கண்டதுமே, பின்பக்கம் சென்ற யமுனா,


விலை

 

 பசிக்கு விலை.. அறிவுக்கு விலை.. அன்புக்கு விலை… ஆசைக்கு விலை… உடைக்கு விலை… உணர்வுக்கு விலை…உண்மைக்கு விலை.. உறவுக்கு விலை… என எல்லாத்துக்கும் விலை கொடுத்து அல்லது விலைக்கு வாங்கி, கடைசியில் நம்மையே நாம் விலையாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோமா..?? அல்லது அந்த கட்டாயத்திற்குள் நாமே நுழைந்து கொள்கிறோமா…???.. வாழ்வின் விடை தெரியாத வினாக்கள் எண்ணற்றவை. அம்மா…!! நான் போயிட்டு வரேன்…..” – துளசி. “ இருடாமா..!! சாப்டுட்டுப் போ…!! “ என்றவாறே, இட்லியை பிட்டு