கதையாசிரியர் தொகுப்பு: சரசுராம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

விடியும் நாள் பார்த்து…

 

 “என்னம்மா யோசனை..? காசு போடுங்கம்மா.. எங்களுக்கு செஞ்சா சாமிக்கு செஞ்ச மாதிரி.. “ என்று நாங்கள் கைத்தட்டி எலக்ட்ரிக் டிரைய்னில் காசு வாங்கிக்கொண்டிருந்தோம். பிச்சைதான். அந்தம்மாவுக்கு மனசு இறங்கியது. ஐந்து ரூபாயைத் தந்தார்கள். சாந்திக்கும் ஐந்து ரூபாய் தந்தார்கள். அந்தம்மாவை நெத்தியில் நெட்டை எடுத்து மனசார வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். சைதாப்பேட்டை ஸ்டேஷனில் ஏறின சித்ராதான் அதைச் அற்புத செய்தியை எனக்குச் சொல்லிவிட்டுப் போனாள். அவள் அதை சொன்ன போது அது எனக்கு ஒரு


மிக்கி மவுஸின் புன்னகை

 

 ”அந்த வழியாக போக வேண்டாம்..” என்றாள் நிம்மி. ”ஊஹூம் நான் வந்தா அந்த வழியாகத்தான் வருவேன்.. நீ வேணுன்னா வேற வழியாக போ..” என்றாள் பவித்ரா. “இல்லடி.. நான் சொல்றத கேளு.. வீட்டுக்கு அந்த வழியா போனா தூரம்..” “ஏன் எப்பவும் அந்த வழியாத்தானே போவோம். இன்னைக்கு என்னாச்சு..? திடீர்னு எப்படி தூரமாச்சு..? அந்த வழியா போனா அந்த துணிக்கடையில புதுசா ஒரு மிக்கி மவுஸ் வந்திருக்காம். பார்த்துட்டு போலாம்.. கை கொடுக்கலாம்.. பேசலாம்.. ஜாலியா இருக்கலாம்..


சி.எம். ஆகிய நான்…

 

 இரவு நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே எங்கள் பகுதியில் ஏதோ பரபரப்பு ஆரம்பித்திருந்தது. யாரையும் நிறுத்தி ’என்னாச்சு..?’ என்று கேட்கும் நிலையில் நான் இல்லை. காரணம் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். இந்த முடிவை நான் எடுப்பது எத்தனையாவது முறை என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த முடிவு இந்த முறை மனதில் அழுத்தமாகவே இருந்தது. மரணத்தைத் தவிர ஒரு சுபமான முடிவு என் வாழ்க்கைக்கு கிடையாது. என்னை புறக்கணித்த இந்த உலகத்தின் மீது வெறுப்பைக்