கதையாசிரியர் தொகுப்பு: க.சொக்கலிங்கம்

11 கதைகள் கிடைத்துள்ளன.

தபாற்காரச் சாமியார்

 

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 அன்று காலையிலிருந்து சந்திரனின் மனம் ஒரு நிலையி லில்லாது தத்தளித்த வண்ணம் இருந்தது. தனது தொழிலுக்கான காக்கிச் சட்டையை அணிந்து கொண்ட போது, நெஞ்சில் ஏதோ குடைச்சல் ஏற்படுவது போல அவன் உணர்ந்தான். காற்சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்து இரண்டு தம் இழுத்தான். அப்பொழுது கூட அவனைப் பற்றி நின்ற சோர்வுநிலை விட்டு நீங்கவில்லை. முற்றத்திலே இறங்கி


அப்பப்பாவுக்கு அறளை

 

 (2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலை ஐந்தரை மணி. வீட்டில் பொன்னம்பலத்தாரும் அவரின் பேர்த்தி கீர்த்தனாவும் மட்டுமே இருந்தார்கள். பொன்னம்பலத்தாருக்குப் பவள விழாக்காணும் வயது. கீர்த்தானவுக்கு வாக்காளர்த் தகுதி பெறும் வயது. கீர்த்தானவின் அப்பா சரவணபவன், அம்மா பவானி. இருவரும் ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. சரவணபவனும் பவானி யும் தங்கள் சக ஆசிரியை ஒருத்தியின் திருமண வரவேற் பில் கலந்துகொள்ள மூன்று மணிக்கே மோட்டார்ச்


கிழவரும் கிழவியும்

 

 (2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எல்லாம் நடந்து முடிந்துவிட்டன கிழவி சுடலையிலே, எரிந்து சாம்பலானது, காடகற்றியது அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியம், ஆத்மாசாந்திப் பிரார்த் தனை, நினைவுமலர் வெளியீடு, உற்றார் உறவினர் நண்பர்களுக்கு மதிய போசனம் எல்லாமே முடிந்துவிட்டன முப்பத்தொரு நாள்கள் எப்படியோ ஓடி மறைந்துவிட்டன போட்ட மறுநாளே மெல்ல மெல்லப் பொய்யாய், பழங்கதையாய்… கிழவியின் மக்கள், மருமக்கள், பேரர், பேர்த்திகள் எல்லாருமே வழமைக்குத் திரும்பிவிட்டார்கள். வீட்டில் ஒரே குதிப்பும் கும்மாளமுந்தான்.


முதியோர் வாழ்க!

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தானும் இருக்கிறதாகக் காட்ட மெல்லிய தூறலாய் மண்ணுக்கும் வெளிக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதிலே, தமது படுக்கையை விட்டு எழுந்து முற்றத்துக்கு வந்த நடராசாக் கிழவருக்குத் தம்மைப் போலவே வற்றி வறண்டு போன பூஞ்செடி ஓர் அதிசயத்தைத் தன்னிலே பொதிந்து வைத்து அவர் வருகைக்காகவே காத்திருப்பது போலத் அந்தச் செடியின் கணுவொன்றிலே வெண்பச்சை நிறத்தில் குருத்து ஒன்று… அதனைப் பார்த்து அதிசயத்தால் திக்கித்துப்


சந்திப்பு

 

 (1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடியும் வேளை. எனது மனைவி புவனேசுவரி பதகளிப்போடு என் முதுகில் தட்டி, “இஞ்சருங்கோ, எழும்புங்கோ,” என்றாள். காலம் கெட்ட காலத்தில், நேரம்கெட்ட நேரத்தில் தனிமையும் முதுமையுமாக இருக்கும் எங்களின் அமைதியை அந்தக் காரின் வருகை பெரிதும் குழப்பியது. துடித்துப் பதைத்து எழுந்த நான் அறையிலிருந்து வெளிப்பட்ட வேகத்தில் எனது தலை சுவரில் மோதிக் கொண்டது. “பார்த்துப் போங்கோ” என்ற புவனேசின் நடுக்கக் குரல்


கோடு

 

 (1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் ‘சாளி’யிலே அமர்ந்திருந்த கம்பீரம் அவளின் உள்ளத்தை இதமாக வருடி இன்பக் கிளுகிளுப்பினை ஏற்படுத்தியது. உண்மையாகவே அவன் அழகன்தான். ‘ட்றிம்’ – பண்ணிய மீசையும் நெளிநெளியாகக் காற்றில் அலைந்த தலை மயிரும் கூரிய நாசியும் குறும்பு தவழும் விழிகளுமாக… அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாழ்நாள் முழுவதும்! காற்சட்டைக்குப் பதிலாகப் பற்றிக் சாறமும் சாளி யின் பின் ஆசனத்தை நிரப்பிக்கொண்டு உரப்பைகளும் இல்லாவிட்டால்,


பப்பி

 

 (1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அருளானந்தம் மாஸ்டர் அன்று மாலை ஏழு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, கேற்றடியில் அவர் மனைவி கமலாம்பிகையும் ஏகபுத்திரன் சதானந்தனும் கைகளிலே பொல்லுகளுடன் அவரை வரவேற்றனர். அந்த வரவேற்பு அவருக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால், பொல்லுகளோடு பொல்லாய் அவர்களது முகங்களிலே கோபக் கனலும் கொழுந்துவிட்டு எரிந்தது தான் வியப்பையும் திகைப்பையும் ஒரு சேர அளித்தன. அவர் ‘என்ன? ஏது? என்று வாய் திறக்க


கனவுகள் கலையட்டும்

 

 (1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று காலையில் அதிபர் பொன்னுத் துரையின் வீட்டுக்கு வந்த நண்பர் செல்லப்பா, அவரோடு பல விஷயங்கள் பற்றிப் பேசினார். ஆனால் அவர் சொன்ன ஒரே விஷயத்தைச் சுற்றித்தான் பொன்னுத்துரையின் சிந்தனை சுழன்ற வண்ணம் இருந்தது. அது அவரை வெகுவாகப் பாதித்தது. ஐம்பத்தெட்டு வயது வரை எந்தவிதப் பொறுப்பும் இன்றித் தாம் உண்டு, தம் பாடசாலை உண்டு என்று இருந்து வந்தவருக்குத் தமது குடும்பப்


மைத்திரி

 

 (1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குருநாகலிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாவத்தகம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் புஞ்சி பண்டா. கமுகு, தென்னை, வாழை, பலா மரங்களோடு கோப்பி, மிளகு ஆகிய பணப்பயிர் களும் நெல்லும் செழித்துக் கொழிக்கும் அழகிய கிராமம் மாவத்தகம. ஆனால், இந்த அழகு, கண்களால் மட்டும் பார்த்து அநுபவிக்கக் கூடிய ஒன்றாகத்தான் புஞ்சிபண்டாவின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இருந்தது. நிலம் என்னும் நல்லாளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அவர்கள்.


மாற்றம்

 

 (1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மங்களநாயகி தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் கந்தசாமிக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு வாரந்தான் இருந்தது. அவர் நினைத்திருந்தால் லீவில் நின்று கடைசி நாள் பாடாசாலைக்கு வந்து பொறுப்பை உரியவரிடம் கொடுத்திருக்கலாம். மலரிலே அமர்ந்து தேனைச் சுவைக்கும் வண்டு மலரிலுள்ள தேனின் கடைசித் துளியை உறிஞ்சும் வரை, அதைவிட்டு நீங்காதது போல அவரும் தமது அதிகாரத்தை இறுதி நாள் வரை சுவைத்தே ஆகவேண்டும்