கதையாசிரியர் தொகுப்பு: க.சீ.சிவகுமார்

19 கதைகள் கிடைத்துள்ளன.

ரசாயனக் கலப்பை

 

 தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம். ஐ.ஆர்-20 அரிசிச் சோற்றுக்கு, பீர்க்கங்காய்க் குழம்பை அம்மா ஊற்றியிருந்தாள். இரண்டும் சூடு. பாசிப்பயறைக் கடைந்து தாளித்த பீர்க்கங்காய். கறிவேப்பிலைகள் முறுகி இருக்கவில்லை. செடிப் பறிப்புக்குப் பிறகு கொஞ்சம் எண்ணெய் தேய்த்த தோற்றம். நெடுக்கில் இரண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்கள். வெங்காயத்தை அம்மா பொன்முறுவலுக்கு விட மாட்டாள். கூரை வேய்ந்த வெளித் திண்ணையில் கிழக்கு ஓரத்தில் சமையல் அறை.


குவளையின் மிச்சம்

 

 உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’ செய்தி, சுருக்கமாகவும் திகைப்பாகவும் இருந்தது. என் உயிருள்ள உடலுக்கும் வில்லியம்ஸின் சடலத்துக்கும் இடையே 40 நினைவுகளும், 40 கி.மீ தொலைவும் இருந்தன. தனது 54-வது வயதில் அத்தனை திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளித்த வில்லியம்ஸ், நேற்று இரவு இறந்துபோனார். வாழ்வின் தாட்சண்யமான அல்லது நிர்தாட்சண்யப் போக்குடன் அந்த ஊரில் இருந்ததில், அதன் பனியும், சில பணிகளும், சில


செவிநுகர் கனிகள்

 

 வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த இடம், அந்தி மாலையிலும் அதிகாலையிலும் பறவை இனங்களின் கெச்சட்டமும் இறக்கையோசையுமாக இருக்கும். வெயில் காலங்களில் பாம்பு, பாம்பிராணி, ஓணான் வகைகளின் சரசரப்பும் அங்கு காணக் கிடைக்கும். அந்த இடத்தின் தெற்கு மூலையில், அந்திமந்தாரையின் சிறு புதரும் இருந்தது. அந்திமந்தாரைக்கு சில வகை வண்ணங்கள் உண்டு. இப்போது அந்த இடத்தில், தேநீர் தயாரிப்பு வேலை நடக்கும் ஒரு


டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது?

 

 பழைய சோற்றில் பாக்கெட் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவாறு உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும் நேரம்… தோழி கலா, ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருப்பார்; மிதந்துகொண்டிருப்பார் அல்லது தவழ்ந்துகொண்டிருப்பார். கலா அமெரிக்கா போகிறார் என்பது, மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவாகியிருந்தது. அவரது கணவரும் எனது நண்பருமான அர்ஜுனன் பணி நிமித்தமாக முன்பே அமெரிக்காவுக்குப் பயணித்திருந்தார். அங்கு சென்று காலூன்றிய பின் மனைவியை அழைத்துக்கொள்ளும் ஏற்பாடு அவரது வேலைத்திட்டத்தில் இருந்தது. நண்பர் அர்ஜுனனை, சில மாதங்களுக்கு முன்பாக கண்ணாடித் தடுப்புகள் மிகுந்த விமான


பறவைகள் கத்தின பார்

 

 தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று, வடக்கு திரும்பி மேலும் மேற்கு நோக்கிப் போகிற கார், 10-ம் நாள் காரியத்துக்குப் போகும் அஞ்சலி மௌனத்தை அவ்வப்போது சுமக்கிறது. அம்மாவின் ஊரைச் சமீபித்தாயிற்று. வேலுச்சாமி மாமாவின் இழவுக்குப் போக முடியாத நான், 10-ம் நாள் காரியத்துக்குப் போகிற விதமாக இந்தப் பயணம் நேர்ந்திருக்கிறது. ”அண்ணன எரிச்சது இந்த


அமிழ்து…. அமிழ்து…

 

 தேனி தேனரசன். தேனரசன் தான் தேனியில் தான் பிக்க வேண்டுமென முன்பிவியில் முடிவு ஏதும் எடுத்திருக்கவில்லை. தமிழ்ப் பற்றாளரும் ஒரு கிராமப் பஞ்சாயத்து அலுவலக கிளார்க்கான அவரது தந்தை துரைசாமியும் தன் மகன் பின்னாளில் தேனி தேனரசன் எனப் பெரும் புகழ் அடைவான் என எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் என்னவோ, “தேனரசன்’ என் பெயர்தான் வைத்தார். தேனரசன் நான்காம் வகுப்பு படிக்கையில் து.தேனரசன் என்று வரலாறு நோட்டில் பெயர் எழுதிக் கொண்டு வரவும் துரைசாமி தமிழ்வழியான எல்லா ஏடுகளிலும்


மனைவியின் அப்பா

 

 பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும் இல்லாத பனி மூட்டம்தான். கண்ணுக்கு எட்டிய தூரத்திலும் கண்ணுக்கு முன்னேயும் பனியே பரவி இருப்பதால், உலகம் எங்கும் பனியே மேவி உள்ளதோ எனச் சந்தேகம் வந்தது. இந்த மலையடிவார நகரத்தில் நானும் என் மனைவியுமாக வந்து இறங்கினோம். எந்த நேரமும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், பனிப்பொழிவில் கூடுதல் குளிர். ஏறக்குறைய ஒரு முழு இரவு


மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு

 

 தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான உணர்வு மேலிட்டது. மின்சாரமும் மின் விளக்கும் இல்லாத அந்த இடத்தில் அவனது தலையணைக்கு அடியில் பேட்டரி லைட் இருந்தது. சுற்றிலும் மேலும் கீழுமாக வெளிச்சம் பாய்ச்சினான். உழவுக் கருவிகளும் உணவுக்கான பொருட்களும் போட்டு வைக்கப்பட்டு இருந்த ஒற்றை அறை திறந்தேகிடந்தது. அங்கே கதவு கடந்து பார்த்தபோது, நாழி ஓட்டுக் கூரையின் தாங்குக்காகப் போட்டு இருந்த விட்டத்தின்


அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…

 

 ‘ஒன்றியச் செயலா ளரே… எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றான். நீங்காத இடமே மங்காத இடமாக மாறப்போகும் சந்தர்ப்பத்துக்காகத்தான், மறுபடியும் அந்த இடத்தில் குமாரு உட்கார்ந்திருந்தான். அது அவரைக்குறிச்சியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டர். அதன் உரிமையாளனும் கணினிகளை இயக்குபவனுமாகிய ரமேஷ், அதற்கு ‘ஐ ஸ்பீடு கிராஃபிக்ஸ்’ எனப் பெயரிட்டு இருந்தான். ‘ஹை ஸ்பீடு’ எனப் பெயரிடாமல், ‘ஐ ஸ்பீடு’ எனப் பெயரிட்டது


தொழிலதிபராக சில ஆலோசனைகள்

 

 முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை மால் ஒன்றில் நான், ஆனந்தன், ரவி, வடிவேல் நால்வரும் இருந்தபோது முருகன் வந்தார். 40 வயதுக்கு மேல் ஆகியிருந்த முருகனுக்கு இரண்டு காரணங்களால் நீர்மூழ்கி என்று பெயர். கிணறுகளில் விழுந்துவிட்ட ஸ்பேனர் முதல் பிணம் வரை எடுத்து வந்து மேலே போடுகிற, ‘தம்’ கட்டுகிற சூரத்தனத்தால் அந்தப் பெயர். முருகனை ஊரில் போதையில் இல்லாத நிலையில்