கதையாசிரியர் தொகுப்பு: குறும்பலாப்பேரிப் பாண்டியன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

குருதிக் கொடை

 

 ஓர் இனிய மாலைப்பொழுதில் அந்தக் கலை அறிவியல் கல்லூரி மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் கல்லூரியில் குருதிக் கொடை நிகழ்வு (இரத்ததான முகாம்) ஒன்று நடைபெற இருந்ததே அதற்குக் காரணம். அரசுத்துறை, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் இவற்றுடன் இணைந்து அந்தக் கல்லூரியே முன் நின்று குருதிக் கொடை நிகழ்வை நடத்த இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளில்தான் பேராசிரியர்களும் மாணவர்களும் முனைந்திருந்தார்கள். குருதி கொடுக்க வரும் கொடையாளிகளாகிய சுற்றுப்புற மக்களுக்கு வழி காட்டவும் உதவிகள் செய்யவும் தேவையான


பேழைக்குள் ஒரு பூதம்!

 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள் யாராவது அவற்றைப் பிடித்து எதிலாவது அடைத்து விடுகிறார்கள்! அப்படித்தான் இந்தக் கதையில் வரும் பூதத்தையும் எவரோ பிடித்து ஒரு பேழைக்குள் அடைத்துவிட்டிருந்தார்கள்… அது யாரென்பதுதான் தெரியவில்லை! அடைத்து வைத்தவர் யார் என்று பூதத்திற்கே நினைவில் இல்லாதபோது நாம் என்ன செய்யமுடியும்? ஆனால், பூதத்தைப் பேழையிலிருந்து திறந்து வெளியே விட்டவர் யார் என்பதுதான் நமக்குத் தெரியுமே, அது


திமிரு

 

 அந்தக் குறுகலான பாதையில் இளவரசனின் குதிரை காற்றாய்ப் பறந்துகொண்டு இருந்தது. பாதை ஓரிடத்தில் வளைந்து திரும்பியது. சற்றுத் தொலைவில் ஒரு கிழவர் பெரிய விறகுக் கட்டு ஒன்றைத் தலையில் சுமந்தபடி தள்ளாடி நடந்து போவது இளவரசனின் கண்களில் பட்டது. அவன் நினைத்திருந்தால் குதிரையின் வேகத்தைக் குறைத்திருக்கலாம். ஆனால் இளவரசனோ ‘‘ஏய்! கிழவா, ஒதுங்கிப் போ!’’ என்று கத்தினான். இளவரசனின் கூச்சல், அவர் காதுகளில் விழவில்லை. பாதையின் நடுவாகவே நடந்து சென்றார். இளவரசனுக்கு சினம் மிகுந்தது. குதிரையின் வேகத்தைக்


சோளக்கொல்லை பொம்மை!

 

 தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார். இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின்சமையலறையில் இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில் கொண்டு இளவரசியின் 17ஆவது பிறந்தநாள் அன்று அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி


சீச்சீ திராட்சை

 

 ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியை உங்களுக்கு நினைவிருக்கும். திராட்சைப் பழத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலைந்த அந்த நரி, அது கிடைக்காத ஏக்கத்தால் நோயில் விழுந்தது. நோய் முற்றி இறக்கும் நிலைக்குப் போன அந்த நரி தன் மகனை அருகே அழைத்தது. ‘‘அன்பு மகனே! திராட்சைக் கனிகளை வயிறார உண்ண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே


கல்லுளிமங்கன்!

 

 ஓர் ஊரில் மங்கன் என்று ஒரு சிற்பி இருந்தான். அம்மி, ஆட்டுக்க்கல், உரல் மட்டுமே செய்யத் தெரிந்த அவனைச் சிற்பி என்று அழைக்கக் கூடாதுதான். ஆனாலும் மங்கனுக்குத் தன்னை எல்லோரும் சிற்பி என்று புகழவேண்டும் என்று அடங்காத ஆவல். அவன் பிள்ளையார் செய்ய நினைப்பதெல்லாம் குரங்காகத்தான் முடிந்தது. இதற்கெல்லாம் மங்கன் அயர்ந்து விடவில்லை. எதையோ செய்யத் தொடங்கி எப்படியோ முடிந்த விந்தையான வடிவங்களையெல்லாம் பெருமிதத்தோடு சேர்த்துவைத்திருக்கிறான். வாய்ப்புக் கிடைத்தால், மாட்டிக்கொள்ளும் இளித்தவாய் வெளியூர்க்காரர்களிடம், திறமையாகப் பேசி விற்றும்


முற்றும் துறந்த மன்னர்!

 

 அடர்ந்த காட்டின் நடுவிலே குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார் ஒரு முனிவர். அவர் வருடக் கணக்கில் தவம் செய்து பல அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தார். ஒரு நாள் அந்தப் பகுதிக்கு நாட்டின் மன்னன் வீரர்கள் புடைசூழ யானையில் வந்து இறங்கினார். விலங்குகளை வேட்டையாடி பொழுதுபோக்குவதற்காகத்தான் அங்கே வந்திருந்தான் மன்னன். படைவீர்கள் மரங்களை வெட்டித்தள்ளி ஒரு திறந்த வெளியை ஏற்படுத்தினார்கள். கூடாரங்களை அமைத்தார்கள். மன்னன் தங்குவதற்கு ஆடம்பரமான கூடாரம் போடப்பட்டது. பட்டு மெத்தையும் தேக்கு மரக்


தங்கமாக்கும் மூலிகை!

 

 அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்து சேர்ந்தார். ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறிய குடிசைபோட்டுக்கொண்டு தங்கினார். ஊருக்குள் அவரைப் பற்றிய செய்திகள் பலவாறாகப் பரவினஅவரை நாடிப் பலர் போனார்கள்.வந்தவர் களுக்கெல்லாம் அறிவுரை வழங்கினார். அரிய உதவிகள் செய்தார். விரைவிலேயே தலைநகரில் இருந்த மன்னனும்அந்த முனிவரைப்பற்றிக் கேள்விப்பட்டான். அவர் பல சித்துக்களைக் கற்றுத் தேர்ந்த பெரும் சித்தர் என்றும், இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களைத் தங்கமாக்கும் ஆற்றல் பெற்ற மூலிகை அவரிடம் இருப்பதாகவும்கூட மன்னன் கேள்விப்பட்டான்.


நரி ஜோசியம்

 

 ஓர் ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் ஒரு வடிகட்டிய கஞ்சன். யாருக்கும் ஒரு சிறு உதவிகூடச் செய்ய மாட்டான். ஆனால், பேராசைக்காரனான அவன், சோதிடர்களைக் கண்டுவிட்டால் உடனே ஓடோடிச் சென்று அவர்களை அழைத்துவந்து, வீட்டில் தங்க வைத்து விருந்து கொடுப்பான். மனம் குளிர்ந்து போகும் சோதிடர்களிடம் அவன் கேட்பதெல்லாம் ‘‘எனக்கு எப்போது புதையல் கிடைக்கும்? நான் எப்போது இன்னும் பெரிய பணக்காரன் ஆவேன்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’’ போன்ற கேள்விகளைத்தான். சோதிடர்களும் அவன்


நாற்பத்து ஒன்றாவது திருடன்!

 

 ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதை உங்களுக்குத் தெரியும். அலிபாபாவின் வேலைக்காரியால், திருடர்களின் தலைவன் ஹசன் கொல்லப்பட்டதுவரை தெரிந்திருக்கும். அதற்கப்புறம் நடந்ததைத்தான் இப்போது படிக்கப் போகிறீர்கள். ஹசனுக்கு ஃபாத்திமா என்ற மனைவியும் அப்துல் காதர் என்ற மகனும் உண்டு. நகரத்தில் அவர்களைக் குடியமர்த்தி இருந்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அவனை வணிகன் என்றே நம்பி வந்தார்கள். அவன் மனைவிக்கு மட்டும்தான் அவன் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத் தலைவன் என்பது தெரியும். அந்தத் தொழிலை விட்டுவிடும்படி அவனிடம் எவ்வளவோ