கதையாசிரியர் தொகுப்பு: கிருஷ்ணா டாவின்ஸி

2 கதைகள் கிடைத்துள்ளன.

காலா… அருகே வாடா

 

 அதிகாலையிலேயே முருகேசனுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதிகாலை என்றுதான் நினைத்தான். ஆனால், ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் சூரிய ஒளி அல்ல; தெருவிளக்கின் பிரதிபலிப்பு என்று தெரிந்தவுடன் செல்போனை எடுத்து மணி பார்த்தான். இரண்டரை. எழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. கால்களில் யாரோ சங்கிலியால் கட்டியது போன்ற வலி. எழுந்து அமர்ந்து பாதங்களைத் தடவிப் பார்த்தான். பயங்கரமாக வீங்கியிருந்தன. வயிற்றிலும் ஏதோ பிரச்னை என்று உள்ளுணர்வு சொல்ல, தடவிப் பார்த்தால் அது பானைபோல் உப்பியிருந்தது. இரண்டு கைகளும் வீங்கி இருந்தன.

atchakadu

அச்சக்காடு

 

 கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப்