கதையாசிரியர் தொகுப்பு: காயத்ரி

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கல்லூரியின் கதை

 

 காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது. சீதா, உனக்குக் காலேஜுக்கு சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் பாரு, டிபன் பாக்ஸை எடுத்து வச்சுக்கோ, புது காலேஜ் அங்கே கேண்டின் இருக்கோ என்னமோ, நான் கனகதாரா சொல்லிட்டு வந்துடறேன். சரியா, சரிம்மா, என் அம்மா இப்படித் தான், காலையில் குளித்ததும் கனகதாரா சொல்லிடுவா, உலகத்துல உள்ள எல்லாரும் நல்லா இருக்கணும், எல்லாருக்கும் உணவு கிடைக்கணும்னு வேண்டிக்கிற ஜீவன். நேர்பட


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

 

 அ,ஆ, (அன்பே, ஆருயிரே) எப்படி இருக்கேங்க? என்னை யாருனு தெரியுதா? மொட்டை மாடி, மொட்டை மாடி. இப்போ? இன்னும் தெரியலையா? சரி, எதுக்கு சஸ்பென்ஸ், பில்டப் எல்லாம். நான் உங்க பக்கத்து வீட்டுலே இருக்கேன். உங்களுக்குக் கூட என்னை நல்லாத் தெரியும். அடிக்கடி பார்ப்போமே. அதாவது, வந்து….நான் உங்க காதலனாக வர ஆசைப்படறேன். அதான் இந்த லெட்டர். என்னடா, நாம பக்கத்து வீட்டுலே குடி வந்து முழுசா 2 மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள எப்படி லவ்


நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்

 

 என் பெயர் அனுபிரபா. நான் படிக்கிறது பெண்கள் கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு. படபடக்கிற வயசு, வித்தியாசமா கலர் கலர் கனவுகளோடு, எந்தக் கவலையும் இல்லாம சிறகடிச்சுப் பறக்கிற மனசு. எல்லாருக்கும் கல்லூரி வாழ்க்கை இனிமையா இருக்கும். எனக்கும் அப்படித்தான். பள்ளி வாழ்க்கை ஒரு தவம், கல்லூரி வாழ்க்கை ஒரு வரம். பிற்காலத்தில் கல்லூரியைப் பற்றி நினைத்துப் பார்க்க, பசுமையான நினைவுகளை எண்ணி அசை போட எனக்கு நிறைய அனுபவங்கள் இந்தக் கல்லூரி மூலம் கிடைச்சிருக்கு.


சீரியோமோபியா

 

 “அந்தக் காஞ்சனாவைப் பழி வாங்கத் துடிக்கிற அவ நாத்தனார் கவிதாவையும் அப்பாவிப்பொண்ணு சந்தியாவைப் பாடாபாடு படுத்தற பத்மினியையும் நான் பழி வாங்காம விட மாட்டேன். அவாளைக் கொன்னாத் தான் எனக்கு நிம்மதி, ம்ம்….” முணுமுணுத்தபடியே படுத்திருந்த அம்மா அம்புலுவைப் பரிதாபமாகப் பார்த்தான் பாலாஜி. அருகே அவன் தந்தை வெங்கடாசலமும் நின்றிருந்தார். “அம்மா, இப்போ எதைப் பத்திப்பா பேசறா?” Sorgam”ஓ அதுவா, மதியானம் போடற சொர்க்கம் சீரியலும் நைட் பார்க்கிற கணவருக்காக சீரியலும் கலந்து அடிக்கிறா. அதுலே பாரு,


புத்தாண்டுப் போட்டி

 

 “என்னங்க,ரொம்ப தீவிரமா என்ன யோசிச்சுக்கிட்டுருக்கேங்க? எனக்குத் தீபாவளிக்குத் தான் ஜோ கட்டியிருந்த அம்பதாயிரம் கலர்ஸ் வர்ற பட்டுப்புடவை வாங்கித் தரலே, பொங்கலுக்காச்சும் ஆறாயிரம் கலர்லே பட்டுப்புடவை எடுத்துத் தரத் தானே பிளான் பண்ணறேங்க?” எதையோ சிந்தித்துக் கொண்டிருந்த கணவன் ராமனாதனிடம் கெளசல்யா பேச்சுக் கொடுத்தாள். ஆமா, அதைத் தவிர எனக்கு வேற வேலை இல்லை பாரு. இப்படித் தான் ஜோ ஜோனு அவ விளம்பரத்துலே காட்டின மாதிரி இதயம் நல்லெண்ணெய் கொட்டி சமைச்சே, என்னாச்சு? ஒரே நாள்லே