கதையாசிரியர் தொகுப்பு: கருணாகரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பனங்காடு

 

 யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும். யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள்


வடகாற்று

 

 பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées பகுதியில் இருக்கும் Beauchamps விடுதியில், எதிர்பாராத விதமாக ஒரு போர்த்துக்கல் நாட்டுக்காரரைச் சந்தித்தான் தேவன். அந்தச் சந்திப்பை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பழுப்பு வெள்ளையருக்கும் ஒரு ஆசியக் கறுப்பனுக்குமிடையிலான சந்திப்பு. ஒரு அகதிக்கும் ஒரு விருந்தாளிக்குமிடையிலான சந்திப்பு அது. எதிர்பாராத சந்திப்பு. அவன் வேலையை முடித்து தங்குமிடத்துக்கு புறப்பட ஆயத்தமாகியபோது வரவேற்புப் பகுதியில் யாரோ ஒருவர்