கதையாசிரியர் தொகுப்பு: ஐஷ்வர்யன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பெயர் உதிர்காலம்

 

 பெயர் தொலைந்திருந்ததை.. அவனால் நம்ப முடியவில்லை! மறுபடி மறுபடி முன்னும் பின்னுமாக அந்த மஞ்சள் பளபளப்புத் தாளை புரட்டிப் புரட்டி வாசித்தும் பலனில்லை. நிஜமாகவே பன்னீரின் பெயர் தொலைந்துதான் போயிருந்தது. இது அடிதான்.. வலி பாய்ச்சவல்ல அடிதான்.. திட்டமிட்டே தரப்பட்ட அடியும்கூட.. எதிர்வினையாய் ‘ரணம் நிகழும், சீழ் கோர்க்கும்’ என எதிர்நோக்கியே விதைக்கப்பட்ட வினை! ஆனால் இவன் விஷயத்தில் விதைத்தவர் நோக்கம் நிறைவேற வழியில்லை. தாக்கப்பட்டவர் அடி பொறுக்கும்போது.. வலி மறுக்கும்போது.. எய்தப்படும் அம்புகள் வீரியம் இழக்கும்..


துலாபாரம்

 

 உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மகனிடமிருந்து வரப்போகும் தொலைபேசி வாழ்த்துக்கான எதிர்பார்ப்பு பரபரப்பு. தூக்கத்தில் எழாமல் போனால் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லத் துடிக்கும் மகன் ஏங்கிப் போய்விடுவானே? எனப் பிடிவாதமாக நாற்காலியிலேயே விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிக்குப் பிறகோ, மகனிடமிருந்து வாழ்த்து வராமல் போன ஏமாற்றம் விசனம். அவனுக்கு பத்து வயசாகையிலா இல்லை அதற்கு முன்பேயா எப்போது ஆரம்பித்த பழக்கம்